பக்கம்:வேனில் விழா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 4 ஆவணத்தாங் கோட்டைச் சாலை

பணம் எல்லாம்..” என்று கேட்டாள் பூவம்மா. விம்மிக்

கொண்டு.

“எல்லாம் நான் அனுப்பிய கடுதாசியும் என் பணமுந் தான்...” என்றான் பூபாலன் குமுறிப் புரண்ட சோகக் குரலில்,

என்ன எண்ணிஞளோ, பூவம்மா, உள்ளே ஓடித் திரும்புகையில் அவள் கையில் அன்று பூபாலன் கொடுத்த அத்தனை பண கோட்டுக்களும், அத்தனை சாமான்களும் இருந்தன.

“மச்சான், என்னை மன்னிச்சிடுங்க. இந்தப் பணம், சாமான் எல்லாத் ை யும் நீங்க எடுத்துக்கங்க. என் கனவு சிதைஞ்சு போச்சு. என்கட்டப் பறந்த அண்ணுச்சி செத் தப்புறம் இனி எனக்கு இந்தப் பூலோகத்திலே வேறே எது வும் கிடையாது. நீங்க என்னை மறந்துவிடுங்க. கான் உங்களுக்கு வாழ்க்கைப்படக் கொடுத்து வைக்காத பாவி ஆகிவிட்டேன்’ என்று பூவம்மா கெஞ்சுலரக் கதறினுள்.

“பூவம்மா, இந்தத் துக்க சமயத்திலே கான் உங்கிட்டே வேறே ஒண்ணையும் வேண்டல்லே. ஆளு. இந்த என் கடைசி ஆசைக்காகிலும் கீ:இடங் கொடு. இந்தப் பணம், சாமான் எல்லாத்தையும் தோன் வச்சுக்க வேணும். உங்கிட்டே நான் கொண்ட அன்புக்கு இது ஒண்னுதானே இனி எனக்கு ஆறுதல் ? மறுக்காம எடுத்துக்கொள். மறுத்தாகான் மனசு உடைஞ்சு பித்துப் பிடிச்சுப் போயிடுவேன்...’ என்று சொல்லிவிட்டுப் பூபாலன் இமைப்பொழுதில் அங்கிருந்து

மறைந்தான்.

அத்தனை சாமான்களும், அத்தனை பணமும் பூவம்மா வின்முன் சுழன்றாேடின :

‘காளி ஆத்தா, இதுதான் உன் சோதனையா? என் அண்ணுச்சி இறந்த சேதி காதுக்கு எட்டின மூணும் நாளே ஏன் ஆயா உசிரையும் போக்கடிச்சிட்டியே? ஐயையோ !

தெய்வமே !...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/115&oldid=684276" இலிருந்து மீள்விக்கப்பட்டது