பக்கம்:வேனில் விழா.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 115

தூணுடன் துணுக கின்றாள் பூவம்மா. அவள் மனசில் எரிமலை கனன்றது; ஊழிப் புல் மூண்டெழுந்தது; துயரப் பிரளயம் அணே மீறியது. அவள் விம்மினுள் ; அழுதாள் ; புரண்டாள். அவள் தனி மரமாளுள். உடன் பிறந்த அண்ணன் சென்ற விதி வழியே பெற்றவளேயும் பறி கொடுத்து விட்டாள் அவள். மகனின் சாவு தாயை:பும் | . பூவம்மா சாகாமல் செத்துக்கொண்டிருந்தாள், i_iffod to

உலர்ந்த அவள் உள்ளத்தில் பூபாலனின் அன்பு முகம் ஏடு விரிந்து மலர்ந்தது. அன்று இரவு தன் மச்சான் இலங்கைச் சீமைக்குப் பயணப்படும் சேதி அவளுக்கு எட்டவே, தலைதெறிக்க விழுந்தடித்துக்கொண்டு பூவம்மா ஒடிஞள.

அங்கே அவள் கண்ட காட்சி அவளைச் சிலையாக்கி விட்டது. பூபாலன் கண்ணிரும் கம்பலையுமாகக் கையில் தாங்கிய மருதமுத்துவின் படத்தின்மீது வைத்த விழிகளே எடுக்காமல் பிரமைகொண்டாற்போல கின்றது கின்றபடி நின்றுகொண்டிருந்தான். பூவம்மா சிலையாளுள்.

“ஐயோ அண்ணுச்சி!” என்று கூக்குரலிட்டாள் பூவம்மா, தன் சகோதரனின் உருவத்தை முகத்துக்கு முகம் வைத் துப் பார்த்தபோது.

“பூவம்மா, அழாதே. அழுததஞலே கம்ப மருதமுத்து திரும்பவும் கமக்குக் கிடைக்கப் போகிருனு ? விசனப்பட்டு இனி என்ன செய்கிறது ? இன்றைக்கு இரவு கான் அக் கரைச் சீமைக்குப் புறப்படுகிறேன். உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் புறப்பட்டேன். அதுக்குள்ளே மருத முத்துவின் ஞாபகம் வந்துடுச்சு. படத்தைப் பார்த்தவன் அப்படியே கின்றுவிட்டேன்.

‘மச்சான், நீங்க இம்பிட்டு உசிராக அண்ணுச்சி மேலே இருப்பீங்க என்கிறதை இப்பத்தான் என் கண் முன்னுலே கண்டறிஞ்சேன். அன்னிக்கு அண்ணனைப் பறிகொடுத்த ஆத்திர வெறியிலே சொன்னதை யெல்லாம் மனசிலே வைக்காதீங்க. என்னை மன்னிச்சிடுங்க, பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/116&oldid=684277" இலிருந்து மீள்விக்கப்பட்டது