பக்கம்:வேனில் விழா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 ஆவணத்தாங் கோட்டைச் சால்ை

மனசு பண்ணி. இப்போ கான் யாருமே காதி இல்லாத அநாதை. பெற்ற தாயாரை இழந்தேன். உயிருக்கு உயி ராயிருந்த என் அருமை அண்ணனையும் இழந்திட்டேன். அன்னிக்கு எம்மேலே உள்ள அன்புக்கு அடையாளமாக பனமும் சாமான்களும் தந்திங்க அன்னிக்கும் இன்னிக் கும்-ஏன் என்னிக்குமே என்னே உங்க பூவம்மாவா ஆக்கிப் பிடுங்க. கருகின மலரைச் சிரிக்கிற ரோஜாப் பூவாக ஆக் குங்க. இனி நீங்கதானுங்களே எனக்கு முழு ஆதாரம்...! மச்சான், முதலிலே கம்ப கண்ணுலத்துக்கு வேண்டியதைச் செய்யுங்க. அப்பாலே அக்கரைச் சீமைக்குப் போகலாம், மச்சான்!” என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் வேண்டி கின்றாள் பூவம்மா.

“பூவம்மா, கண்கலங்காதே. எப்பவுமே நீ இனி என் பூவம்மாதான்! நானே வந்து உங்கிட்டே கம்ப கண்ணுலச் சங்கதியைப் பத்திப் பேசனுமின்னு நினைக்சேன். அதுக் குள்ளாற நீயே முந்திக்கிட்டே. நெசமாச் சொல்றேன், இப்பத்தான் செத்துப்போன உன் ஆயா, அண்ணுச்சி ரெண்டு பேரு ஆவியும் கிம்மதிப்படும். மச்சான் கிட்டே அவன் இறக்கும்போது நான் கையடிச்சு வாக்குக் கொடுத்த படி உன்னே என் பூவம்மாவா ஆக்கிக்கப் போறேன். நீ தான் எனக்கு உசிரு...’ என்று சொல்லிப் பூபாலன் பூவம் மாவின் கண்ணிரைத் துடைத்து விட்டான். பல நாட்களுக் கப்புறம் அப்பொழுதுதான் பூவம்மாவின் கடை இதழ்களில் புன்னகை மடல் இதழவிழ்ந்தது!

அருமை கண்பன் மருதமுத்துவை இழந்த பின்பு, பூபாலனுக்கு மறுபடியும் அக்கரைச் சீமைக்குப் போவதில் விருப்பம் சிறிதும் இல்லை. அதுவும் பூவம்மாவைக் கல்யா ணம் செய்துகொண்ட பிறகு, எதிலும் முதலில் அவளு டைய விருப்பத்தைப் பெற வேண்டியதா யிருந்தது. அவளுக்கு அக்கரைச் சீமைக்குப் போக விருப்பமே இல்லை. ஆகவே பூபாலன் உள்ளூரிலேயே நிலம் வாங்கிக் கொண்டு சிரத்தையாகப் பயிர்த் தொழில் செய்ய ஆரம்பித்தான். பூவம்மா, பூபாலன்-இவர்களுடைய மனசைப் போல் பயிர்த் தொழில் நன்கு செழித்து அவர்களுக்கு நல்ல பலனைத் தந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/117&oldid=684278" இலிருந்து மீள்விக்கப்பட்டது