பக்கம்:வேனில் விழா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 1 I

வேண்டுமே? ஊஹூம்; கிடையாது. கிடையவே கிடை யாது! ஆளுல் ஒன்று. பேசி கிறுத்துவதற்குள், அவன் பாடு போதும்போதுமென்றாகிவிட்டது. கைக்குட்டையை நீளமாக விரித்து உதறிஞன் அவன். தந்தி ரசீது ஒன்று தத்தித் தவழ்ந்து விழுந்தது. திலகவதியின் வெற்றிக்கு வாழ்த்து அறிவித்ததற்கு அடையாளம் வேண்டுமல்லவா?

கண்களிடைத் தேங்கிய காரிகையின் கருணை முகம், அவன் மனத்தைப் புண்ணுக்கிப் பள்ளுப்பாட வைத்தது! கை விரித்து, கை ஏந்தி நின்றவனுக்கு ஒருகணம் சிலிர்ப்பு உண்டாயிற்று. கி.பகினைவுப் பறவை, மனக்கண்டினுள் முடங்கிச் சிறகுகளை அடித்துக்கொண்டது. ‘தம்பி!” என் னும் விளிப்பு திரும்பத்திரும்ப உதித்தழிந்தது.

தேம்பி! பெண் வீட்டிலே வசதிகளெல்லாம் எப்படி?” *நம்மைக்காட்டிலும் வசதி மிகுந்தவங்க!”

‘சரி தம்பி. ஐப்பசி பிறக்தானதும், நான் ஒருதரம் பட்டணத்துக்கு வந்து பெண்ணைப் பார்த்துப்பிடறேன்!” என்றாள் அலமேலு அம்மாள்-சாரங்கராஜனின் அன்னே. மறுகணம், அவன் காண்பித்த அந்த இரண்டாவது புகைப் படத்தை அவள் விழி செலுத்தினுள். பதட்டமும் எரிச்ச லும் உடன்பிறப்புப் பாசம் பூண்டவையோ?...சேலை முக்தி யைக் கொய்தாள் அவள். சொட்டிய வேர்வை மணிகள் அந்த வெள்ளைப்புடவை நுனியில் சொட்டின.

இதுதான் திலகவதியோட அப்பா. திலகம் தாயில்

லாப் பெண் அம்மா!’

அலமேலுவின் கண்கள் பொடித்தன!

வரப்போற மருமகள் தாயில்லாப் பெண் என்கிற தகவல் கிடிைத்ததும், அம்மாவுக்கு வருத்தம் தாளலே

போலிருக்குது...’

முகத்தைப் படிக்கக் கண்ணுடி உதவலாம். ஆல்ை, அகத்தைப் படிக்க முகம் எப்போதுமே உதவிவிடுமென்று சொல்லிவிட இயலுமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/12&oldid=684281" இலிருந்து மீள்விக்கப்பட்டது