பக்கம்:வேனில் விழா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.20 காதலுக்குக் கண் உண்டு !

திரம் அக்கறையில்லை என்றா கினைக்கிறாய்? அப்பா உயி ருடன் இருந்தாலாவது, இப்போது கல்யாணத்துக்கு என்ன அப்பா அவசரம்” என்று நவநாகரிக காலேஜ் மாணவி மாதிரி ஒரு போடு போட்டு நாடகம் கடிப்பேன். உன்னிடம் கான் ஏனம்மா வெட்கப்பட வேண்டும்?... தை பிறந்துங் கட்ட இன்னும் வழி பிறக்கவில்லையே யென்று யோசிக் காதே! உனக்குத் தெரிந்த இடங்களிலுள்ள பெண்களின் ஜாதகங்கள் அத்தனை யையும் ஸ்பெஷல் லாரியிலாவது வர வழைத்துக் கொடு, புகைப்படங்கள் சகிதம்!... ஒரே மூச்சில் எனக்குப் பிடித்தவனே க் சுயம்வரம் கடத்தித் தேர்ந்தெடுத் துக் கொள்ளுகிறேன்......! அப்புறம் யுேம் உன் அருமந்த மருமகளும் என்.ே க் குரங்காக வைத்தாலும் எனக்கு அட்டி ஏதுமில்லை, தாயே!”

போடா போக்கிரிப் பயலே...!”


போக்கிரிப் பயலுக்கு உறக்கம் கொள்ளவில்லை! ஊண் செல்லவில்லை; பால் கசந்தது; படுக்கை கொந்தது; ஐயையோ, காதல் கோயல்லவா இது..?

மழை கொட்டியது.

ராஜேந்திரனுக்கு அன்று கிடைத்த குடையின் ஞாபகம் வந்தது. குடைக்குரியவளின் இனம் புரியாத ஏதோ ஒரு பதுமை உருவம் அவனது பிரம்மசாரி மனசிலே ரவை ரவை யாகப் பிறந்தது; வளரத் தொடங்கியது. தன்னை மறந்து, ‘ஆஹா போட்டவன், அந்தக் குடையை ஒருமுறை விரித் தான். விரித்த குடையிலிருந்து, ‘என்னைப் பார்!’ என்று சொல்லிக்கொண்டு ஒரு போட்டோ விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த ராஜேந்திரன் அப்ப்டியே திக்குமுக்காடிப் போனுன். ‘என் கருத்தைக் கவரும் எந்த மோஹினியின் படமோ என்று எத்தனை ஆசையுடன் படத்தை எடுத் தேன்...ஆனுல்...? ஹாம், கடைசியில் என் போட்டோ தானு விழுந்து தொலைக்க வேண்டும்...? பீடை... யாரோ ஒரு பெண்ணின் குடையினின்றும் என்னுடைய புகைப் படம் விழுவதென்றால், எனக்குக் கதையொன்றும் புரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/121&oldid=684283" இலிருந்து மீள்விக்கப்பட்டது