பக்கம்:வேனில் விழா.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காதலுக்குக் கண் உண்டு !

மயிலாப்பூர் தபாலாபீஸில் திரு. ராஜேந்திரன் பெயருக்கு உறைக் கடிதமொன்றிருந்தது.

மாம்பலம்,

  • திரு. ராஜேந்திரன் அவர்கட்கு,

உங்களுடைய அன்பான கடிதம் கிடைத்தது சந்தோஷம் என்று சொல்லுவதா? இல்லை, நன்றி என்று கவில்வதா ?

அன்று, குடை காரணமாக கடந்துவிட்ட அசந்தர்ப்பத் திற்காக என்னை மன்னிக்கும்படி கானே உங்கட்கு எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆணுல் உங்கள் கடிதம்...? என்னைப் பெண் பார்க்க வந்தீர்களே, அப்போதைய என் நிலை கூடவா கான் தவறை உணர்ந்ததைச் சொல்லவில்லை ? ஆளுல் உங்கள் கடிதம்-!

ஆளுல் ஒன்று ! உங்களைப் பற்றித் தினமும் கதை கதையாகச் சொல்வதுதான் என் அண்ணு கண்ணனின் கித்திய ஜோலி. உங்களிடம் என்னை சார்ஜ்’ ஒப்புவிக்க வேண்டுமென்பது அவரின் இரண்டாண்டுத் திட்டம். அப்படிப்பட்ட பொன்னை நேரத்திலே, உங்கள் போட்டோ வை எப்படியும் சம்பாதித்து வருவதாகவும் வாக்குத் தந்தார். அன்று என் குடையை எடுத்துக்கொண்டு ஆபீசுக்குச் சென்றவரின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

அப்பொழுதுதான் என் அ ண் ணு குடையைப்

பறிகொடுத்து, எப்படியோ தேடிக் கண்டுபிடித்த உங்கள்

ப்ோட்டோவையும் தொலைத்துவிட்டு என் முன் நின்றார்.

அடுத்த காள்தான் நம்முடைய சந்திப்பு கிட்டியது. ஆல்ை...?

- - - ஆண்-பெண் சரிநிகர் சமானம் என்ற பேச்சு அமலில் நடைபெற்று வரும் பொன்யுகம் இது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/127&oldid=684289" இலிருந்து மீள்விக்கப்பட்டது