பக்கம்:வேனில் விழா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 127

கர்வபங்க விழாவுக்கு என்னத் தயாராகும்படி எழுதி யிருக்கிறீகள் !

விதியின் எழுத்தை அழித்தெழுத நான் யார் ?

இப்படிக்கு, ரஞ்சனி.”

2k முகர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.

திருமணக் கோலத்தில் மணவறையில் மாப்பிள்ளையும் மணப் பெண்ணுமாக சிரஞ்சீவி ராஜேந்திரனும் செள பாக்கியவதி ரஞ்சனியும் மேளம், பாண்டு புடைசூழ வீற் றிருந்தார்கள்.

மாப்பிள்ளையும் பெண்ணும் குனிந்த தலை நிமிரவில்லை. இதை டெலிவிஷனில் அறிந்துதானே என்னவோ தபால் காரன் அவர்கள் இருவரிடமும் தனித் தனியாக ஒவ்வொரு கவரை நீட்டிச் சென்றான்.

ராஜேந்திரன் அசந்து விட்டான். அவன் கையிலே தானும் ரஞ்சனியும் கொண்ட அழகிய புகைப்படமொன் றிருந்தது ரஞ்சனியின் உள்ளம் கவர் உருவம் அவனுக்குப் போதை ஏற்றியது !

ரஞ்சனி திகைத்தாள். அவள் கையிலே, தானும் ராஜேந்திரனும் கொண்ட அழகிய புகைப்படமொன்று காட்சியளித்தது. ராஜேந்திரனுடைய மனமோகன எழில் அவளுடைய மேனி முழுவதிலும் இன்பக் கனவை ற்ப வித்தது.

அடுத்த விடிை ராஜேந்திரனும் ரஞ்சனியும் ஒருவரை யொருவர் அன்புடன், ஆதரவுடன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டார்கள். இரு ஜோடி விழிகளுமே பரஸ்பரம் மன்னிப்புக் கோரியிருக்குமோ ?...

34: *

கொட்டு மேளம் முழங்கியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/128&oldid=684290" இலிருந்து மீள்விக்கப்பட்டது