பக்கம்:வேனில் விழா.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காதலுக்குக் கண் உண்டு !

கண்ணனின் கண்களில் அசல் ஆனந்தக் கண்ணிர் இருந்தது. அவனுடைய நெஞ்சின் அலைகள் இங்கனமாக ஆரவாரம் புரிந்தன ; ‘ஆஹா ! என் இன்பக் கனவு பலித்து விட்டது. கல்ல வேளை, ராஜேந்திரன் ஆத்திரத்துடன் பழிக்குப்பழி வாங்கப்போவதாக எழுதிய லெட்டரையும், அதற்குப் பதிலுக்கு வைராக்கியம் குரல் கொடுக்க ரஞ்சனி எழுதிய கடிதத்தையும் நான் பார்க்க நேர்ந்தது. இவ்விருவ ரின் குரங்குப் பிடிப்பான பழியுணர்ச்சியும் வைராக்கியமும் எந்த விபரீத முடிவில் கொண்டுபோய் விடுமோ என்றஞ்சிய எனக்கு கல்லதொரு மனுேதத்துவம் பளிச்சிட்டது. நான் பிழைத்தேன்! பெண் பார்க்கும்போது பிடித்த அவர்கள் இருவரும் கொண்ட போட்டோவை-அழகு சொட்டிய அந்தப் படத்தைத் தனித்தனியாக இருவருக்குமே அனுப்பி னேன். அவர்களின் மனமாற்றத்தை-பிறந்த பொன் யுகத்தை-அவர்களுடைய சிரித்த முகம் .ெ ச ல் லி விட்டதே...! ம்...எல்லாம் இவன் செயலல்ல-’ அவன் ’’ செயலாக்கும்...!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/129&oldid=684291" இலிருந்து மீள்விக்கப்பட்டது