பக்கம்:வேனில் விழா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 பலியா ?

‘சபாசு வடிவு, ஊம்; அப்படியானு, மாப்பிள்ளைக்கு விருந்து பண்ண இப்பதொட்டே தயார்ப் படுத்த வேண்டி

யதுதானுக்கும்.”

வடிவழகி-அவள் கணவன் வீரப்பன் இருவரும் ஜோடிப் புருக்கள். அவர்களிரண்டு பேர்களும் கைப்பிடித்த வாழ்க்கைத் துணைவர்களானது இருக்கின்ற த பாருங்கள் அது ஒர் அதிசயமான கதை; உண்மை நிகழ்ச்சி!

*

டிெவழகி வீரப்பனுக்கு வாழ்க்கைப்பட வேண்டிய முறை. அவள் தன் அத்தானின் கரம் பற்றப் பொன்னை சந்தர்ப் பத்துக்குக் காத்திருந்தாள். ஆனல் வீரப்பன் அவளேப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டவகைத் தெரியவில்லை. அவள் செயலற்றாள். அவள் கவலை தந்தை சுப்பன் சேர் வையைத் திணற அடித்தது. பருவம ைடந்த வடிவை வீரப்பனிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று சேர்வை ஆசை ஆசையாக விருந்தான். -

வடிவழகி!

எழில் அவள் வடிவத்தில் எதிரொளி வீசிற்று; காட்டில் பூத்த ரோஜா அவள். பருவம் அவள் அழகிற்கு முலாம் பூசியது. போதை நிறைந்த புன்னகையில் மின்னும் காந்தக் கவர்ச்சி அவள் அழகை மிகைப்படுத்தியது. -

எல்லாம் பொருந்தியிருந்தும் வீரப்பன், வடிவழகியிடம் இப்படிப் பாராமுகமாகத்தான் இருந்தான். வீரப்பனுக்கும் வடிவழகிக்கும் முடிச்சுப் போட்டுவிட வேண்டுமென்ற கவலையில் நாட்களை விரலைவிட்டு எண்ணிக் கொண்டிருந்த இரண்டு தரப்புப் பெற்றேர்களும் அப்படியே கதிகலங்கிப் பாகும் வண்ணம் வாய்த்தது வீரப்பனுடைய விபரீத முடிவு. அவன் மனமாற்றத்தைக் கேள்விப்பட்ட ஊரார்கள் ஒரு கணம் வாயில் விரலை வைத்து ஆச்சரியப்படத்தான் செய் தார்கள். -

- தன் மச்சானின் தீர்மானத்தை அறிந்த வடிவு மன. மிடிந்தாள்; அழுதாள்; புலம்பினுள்; ஆசை அத்தானேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/131&oldid=684294" இலிருந்து மீள்விக்கப்பட்டது