பக்கம்:வேனில் விழா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 13 f

அழகாக நடத்தப் போகும் இன்ப வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு எவ்வளவு எண்ணங்கள் எண்ணியிருந்தாள்!

வீரப்பனுக்குத் திடீரென வடிவழகியின் பேரில் இவ் விதம் அவளைப் புறக்கணிக்கும் ரீதியில் வெறுப்பு ஏற்படக் காரணம்?

புதிர் ஒன்றுமில்லை.

வடிவழகி எழுத்து வாசனை கிஞ்சித்தேனும் அறியாத வள் என்பது ஒன்றே குறை. அந்த வட்டாரத்திற்குள் காலுந் தெரிந்தவன் வீரப்பன். உலக சமாச்சாரம், அரசி யல் சேதி இப்படிப்பட்ட செய்தி எல்லாம் அவன் சொல்லித் தான் மற்றவர்களுக்குப் புரியும். ஆகக்கூடி, ஊரார் களுக்கு வீாப்பனிடம தனித்த ஈடுபாடும், விசுவாசமும் உண் டானதில் ஆச்சரியம் எதுவுமில்லையல்லவா?

நாள் ஆக ஆக-அதாவது சுய அறிவு அவன் வாழ் விற்கு ஒளிபரப்பி வழிகாட்டும் கிலையில், தன்னுடைய எதிர் கால இல்லற வாழ்க்கைத் துணை குறித்து வீரப்பன் அடிக்கடி ஆலோசித்துப் பார்க்கலானுன். அப்போது தனக்காகப் பரிசம் போட்டிருக்கும் வடிவழகியின் குறை பாடு அவனுக்குப் புலப்பட்டது. வருங்காலம் வனப்புக் கொண்டு விளங்க கைதொடும் மனயாட்டி அழகுடன் ஓரளவு கல்வியறிவுள்ளவளாக இருக்க வேண்டும்; அப்படி அமைந்தாலே தன்னுடன் இணைந்து வாழ்க்கை கடத்த முடியும் என்பது வீரப்பன் லட்சியம். ஆனல் அவனுக் காகக் காத்திருக்கும் வடிவழகி அவன் லட்சியத்துக்கு எங் ங்ணம் ஈடுகொடுக்க முடியும்? அவள் எழுத்தறிவற்றவளா யிற்றே! . ஆனல் குற்றம் அவள் மேல்தான்! ‘வடிவு, கொஞ்சமானும் படித்துக்கொண்டாத்தான் தேவலாம்’ என்பதாகச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவளிடம் நேரில் பலமுறை வீரப்பன் எச்சரித்தும், அவள் அவன் சொன்ன சொற்களைச் செவிமடுக்க வில்லை.

கடைசியில் ஒருநாள் தேவையில், யாருக்கும். தெரியா மல் வீரப்பன் ஊரைவிட்டு மறைந்துவிட்டான். கல்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/132&oldid=684295" இலிருந்து மீள்விக்கப்பட்டது