பக்கம்:வேனில் விழா.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 பலியா ?

ணமும் தடைப்பட்டது; வடிவு தீயிலிட்டமெழுகென உள்ளம் உருகினுள்; அடித்து வைத்த கற்சிலையாகி விட்டாள்.

“அத்தான் சொன்னது கணக்கா முன்னமேயே படிப் புக் கேட்டிருந்தா ஏதுக்கு இந்த இடுசாமம் வரப்போவுது. என் கண்ணே என் ஆன மறைச்சிருச்சே, காளியாத்தா தோன் கருணை காட்டவேணும்.”

அப்பொழுதுதான் அவள் குற்றம் வடிவுக்கு விளங்கி யது. அண்டி வந்த புதையலைக் கைகழுவ விட்டதற்குத் தனது அறிவின்மையே காரணம் என்பதை கினைக்க கினைக்க அவளுக்கு அழுகை வளர்ந்தது.

“பள்ளிக்கட்டத்து வாத்தியாரம்மா கிட்டப் போய் தெனமும் படிப்புச் சொல்லிக்கிட்டா என்ன?’ என்ற யோசனை வடிவழகியின் மனத்தில் மின்வெட்டவே, அன்றே வாத்தியாரம்மாவிடம் சென்று வரலாறு பூராவையும் ஒளிவு மறைவின்றிக் கூறினுள் வடிவு.

“வடிவு, இன்று முதல் உன் கண் கலங்க நான் இனங் கேன். வீரப்பனை மணக்கவிருக்கும் நீ கொடுத்து வைத்த வள். எண்ணி ஏழெட்டு மாசத்திற்குள் உன் கைப்படவே அத்தானுக்கு ‘லெட்டர்’ எழுதும் அளவுக்கு கான் கற்றுக் கொடுத்து விடுகிறேன். அதற்கு நாளுச்சு’ என் ருள் அம்மா.

அவள் தன்மீது இவ்வளவு அன்பு காட்டுவதைக் கண்டு வடிவழகி எவ்வளவோ ஆறுதல் அடைந்தாள்.

“கொண்ட கொள்கைப்படி இனியும் அத்தான் என் சொந்த மச்சான்தானே...” என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்த பொழுது, பெருமிதமும் பூரிப்பும் அவளுக்கு ஏற் பட்டன. ஆளுல் மறைவது போன வீரப்பனின் கதி......? அவளுடைய பேதையுள்ளம் குமுறியது.

 s

மாதங்கள் பல கழிந்தன. ஒருநாள் பட்டணத்தில் வீரப்பனக் கண்ட அவன் சொந்தக்காரன் எப்படியோ பின் தொடர்ந்து, அவன் கணக்கு வேலை பார்க்கும் கடை விலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/133&oldid=684296" இலிருந்து மீள்விக்கப்பட்டது