பக்கம்:வேனில் விழா.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பலியா?

‘அம்மா, உண்மையில் இரண்டு பேருமே உங்களுக்குக் கட்டுப்பாடுடையோம்!”

வீரப்பன் பட்டணத்தில் இருந்த வண்ணம், எப்படியும் வடிவழகியைத் தூண்டி அவளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதாகப் பிரார்த்தித்து, அதே வாத்தியாரம்மாவிற்கு அடிக்கடி தபால் எழுதிய ரகசியம் வடிவிற்கு நாளது தேதி வரை தெரியவே தெரியாதாம்!

தமுக்குச் சப்தம் கேட்டது. பொங்கலுக்கு மச்சான் எடுத்து வந்த புடவை காற்றில் சலசலக்க வடிவழகி புது மணப்பெண் போல கின்றிருந்தாள். வாசலில் கசமுக’ வென்ற பேச்சொலி கேட்டு அவள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

“ஆமா, தம்பீ. காவு கொடுக்கிறார்களாமே, காவு. பாவம், வாய்பேசத் தெரியாத ஆடு, கோழிகளைத்தான காளி ஆத்தா கேட்கிருள்? எல்லாம் சாமி பெயரைச் சொல்லிக் கோயில்காரங்க ஏமாத்தற பொழைப்பு. சாயங் திரம் எப்படியும் பலி கொடுக்கிற வழக்கத்தை கிப்பாட்ட ணும். இல்லாட்டி என் தலையையே அந்தக் காளிக்கு......” உணர்ச்சி கொப்பளிக்க வீரப்பன் பேசியதைக் காது கொடுத்துக் கேட்ட வடிவழகிக்கு உடல் வியர்த்துக் கொட்

அவளுக்குப் பேச்சின் சாராம்சம் புரிந்தது. பலி கொடுக்கும் சம்பவத்தை மாற்ற வேண்டும் என்பது அத் தானின் குறிக்கோள் என்பதையும் உணர்ந்தாள். ஆளுல் இது எப்படி சாத்தியம்? கோவில் உடமைக்காரர்கள் ஊரில் பெரும் புள்ளிகளாயிற்றே! ‘இல்லாட்டி என் தலையையே அந்தக் காளிக்கு...” என்று சபதம் செய்த தன் மச்சானின் பேச்சில் தொனித்த உறுதியை எண்ணிப் பார்த்த அவளுக் குக் கவலை மிஞ்சியது. பலகோடி நினைவுகள் அவள் கெஞ் சிலே விசுவரூபமெடுத்தன. . . . .

அன்று அந்திசாயும் பொழுது; வடிவழகி கோவில் நோக்கிப் புறப்பட்டாள். எங்கும் ஜனத்திரள் மிண்டியிருக் தது. ஒரு பக்கம்.குண்ட் ராட்டினம் சுழன்ற்து. அடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/135&oldid=684298" இலிருந்து மீள்விக்கப்பட்டது