பக்கம்:வேனில் விழா.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I35

சிலம்பு விளையாட்டு, மற்றாெரு பக்கத்தில் சீரங்கம் தெரி யுது பார்; சென்னைப் பட்டணம் தெரியுது பார்!’ என்று பாடிப் படம் காண்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் பட்டிக்

காட்டுப் பாவையரின் கும்மிச் சத்தம் காதைத் துளைத்தது.

ஆச்சு!

அற்புதச் சோடனை செய்திருந்த தேர் ஊர்வலம் புறப் பட ஆயத்தமாக கின்றது. மறு விடிை வடிவழகியின் பார்வை திசை திரும்பியது; திடுக்கிட்டாள், தூண்டில் போடப்பட்ட மீன் குஞ்சு போல. ஏராளமான ஆடுகளும் கோழிகளும் அம்மனுக்குக் காவு கொடுக்க கிறுத்தப் பட்டி ருந்தன. தலை முழுதும் மஞ்சள் பூசியிருந்தது. கழுத்தில் பூமாலே. பூசாரி சாம்பான் கையில் தீட்டிய அரிவாளுடன் உச்சாடனம் பெற்றவனைப் போல உறுமினுன; பயங்கரமாக விழித்தான். எ ன் ன சொன்னேன்? உச்சாடனமா? ஹஹ்ஹா! சுத்த ஹம்பக் பாவம் கள் இல்லாததால் முன் சுரத்து அவனிடமில்லை.

வடிவழகி திகைத்து விட்டாள். அக்தோ, சாவின் சங் நிதியில் கின்ற அத்தனை வாய் பேசமாட்டாத உயிர்களையும் ஒரு விசை ஏறிட்டு கோக்கினுள்! கருணை பொழியும் கட லாகிய அக்த ஜகன் மாதாவா கருணையின்றிக் கொடை’ கேட்கிருள்? கோழி தன் குஞ்சை எங்ஙனம் தின்ன விழை யும்?

‘தன் முன் எமன் வடிவில் கின்று கொண்டிருக்கும் பூசாரியை எப்படியாகிலும் ஏமாற்றி அவ்வளவு உயிர்களே யும் காப்பாற்றிவிட்டால்...ஆகா!” அவள் ஆவல் அது. முடியுமா? -

எதிரே திரும்பினுள். வீரப்பனைச் சுற்றி. நாலைந்து தொண்டர்கள் பலி செய்யும் கொடுமையை விவரித்தனர். புத்தர், சமண முனி, காந்தி மகாத்மா போன்ற புெரியோர் களின் பொன் மொழிகளை அவர்கள் கூறக் கேட்ட வடி வழகியின்-சூழவிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ் வொருவரின் கண்கள்.நீரில் நீந்தின. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/136&oldid=684299" இலிருந்து மீள்விக்கப்பட்டது