பக்கம்:வேனில் விழா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 36 பலியா ?

பறை ஒலி வானளாவியது. கொம்பு முழங்கியது. கோவில் அடிமைக்காரர்கள் அம்மனுக்கு என ஒவ்வோர் ஆண்டு கொடுக்கும் பலியை நிறுத்த ஒப்பவில்லை. வீரப்பன் தனித்து எவ்வளவோ மன்றாடின்ை; பயனில்லை.

பூசாரி முதல் ஆட்டின் தலைக்கு நேராகப் பளபளவென மின்னிய வாளை ஏங்கப் போஞன். அந்தப் பொறிதட்டும் கேரத்தில் வீரப்பன் ஒடிப்போய் கின்றான் வாள் பிடித்து கின்ற பூசாரியின் பன். அவ்வளவுதான். வடிவழகிக்கு உயிர் தத்தளித்தது; அவளும் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து “அத்தான்!” என்று அலறிவிட்டாள்.

“அத்தான், கம்ம ரெண்டு பேருமே காளிக்குப் பலியா கிப் போயிடுவோம். அப்புறம் அந்த வாய் பேசாத பிராணிகளாச்சும் உயிர் தப்பட்டும்,” என்றாள் வடிவழகி.

கடிட்டத்திடையே மயான அமைதி கிலவிற்று. கோவில் காரர்கள் சிலையாகி நின் ருர்கள்.

அதே சமயம் தேரின் முன்பாக வந்து கின்ற ஜீப்"பி லிருந்து போலீஸ்காரர்கள் இறங்கினர்கள். அப்போதுதான் வீரப்பனுக்கு மலர்ச்சி ரேகை விட்டது. வடிவழகி அதி சயித்தாள்.

“தெய்வங்கள் பெயரால் செய்யப்படும் பல அநீதி களில் பலி மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தெய்வ மும் இம்மாதிரி ரத்தப்பலியை விரும்புவதுமில்லை; ஏற்கவும் ஏற்காது. தங்கள் தங்கள் பிரார்த்தனைகள் கிறைவேறி விட்டால் உடனே கொடை கொடுப்பதாக வேண்டுகிறார், கள் குருட்டு கம்பிக்கை கொண்டு. ஆனல் இந்த உயிர்கள் கொட்டும் இரத்தக் கண் ணிரை அவர்களெல்லாம் அறிவ தில்லை. அண்மையில் பலித்தடை மசோதா நம் சர்க்காரில் சட்டமாயிருக்கிறது. இது சர்க்கார் உத்திரவு; பலியின்றித் தான் உங்கள் விழாவைக் கொண்டாட வேண்டும்......” என்றான் ஒரு போலீஸ்காரன்.

கூடியிருந்தவர்கள் மெய் சிலிர்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/137&oldid=684300" இலிருந்து மீள்விக்கப்பட்டது