பக்கம்:வேனில் விழா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையலும் தையலும்

ltடன் குடிசையினுள் நுழைந்த சமயம் மெல்லிய முனகல் சப்தமொன்று அவன் காதில் கன் ருக விழுந்தது ; கையில் வைத்திருந்த மகுடியைத் தடாரென்று கீழே போட்டுவிட்டுத் திரும்பிஞன்.


‘தம்பி..... .”

தரையில் விரித்திருந்த கிழிந்த பாயில் படுத்திருந்த தமையன் முருகுவின் அழைப்பு அவன் செவியில் ஏறிற்று. ஆளுலும் அப்போதைய மனகிலேயில் அந்த வார்த்தைகள் மர்ட்னுக்கு நெருப்பாகத் தகித்தன. வேதனை பெரு மூச்சாகி வெளியேறிற்று,

‘தம்பி, கொஞ்சம் விளக்கைப் பொருதுவேன்......... இருட்டு கம்முன்னு இருக்கு...கண்ணுகட்டத் தெரியல்லே... சங்கிலிக் கருப்பண்ணசாமி, இதுவா உன் சோதனை? ஊம்... இருந்திருப்பிலே உடம்புக்கு இப்படி வந்திருச்சே. தேற எம்பிட்டு காளாகுதோ...பாவம், மாடனுக்குத்தான் வீண் சிரமம்...”

நெருப்புக் குச்சியைப் பெட்டியின் ஓரத்தில் உரசி விளக்கேற்றினுன் மாடன். இருண்ட வெளியில் ஒளி பரவிற்று. அவன் இருண்ட மனத்திலுங்கட்ட கம்பிக்கை ஒளி உதயமாவது போன்ற பிரமை இழைந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/139&oldid=684302" இலிருந்து மீள்விக்கப்பட்டது