பக்கம்:வேனில் விழா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 139

வஞ்சி!”

மாடன் கம்மிய குரலில் அப்பெயரைத் தனக்குள் ஒரு முறை அழைத்துப் பார்க்கலாஞன். அழைத்த வாய் கமழ்ந்தது. அவன் இதயத்திலே இன்ப ஊற்றுப் பெரு கிற்று.

“கருப்பண்ணசாமி, வஞ்சி எனக்குக் கிட்டுவாளா ? எட்டாப் பழமாகிவிடமாட்டாளே? ஒனக்கு ஒரு பொங்கல் வச்சுக் கும்பிடுறேன். எப்படியும் அந்தக் குட்டி என் வசம் வந்திர நீ தோன் கண் திறக்க வேணும்.”

சற்று நேரத்திற்கு முன்பு குடிசைக்குத் திரும்புகையில் மாடன் வழியில் வஞ்சியைச் சக்தித்தான்.

- வஞ்சி!” என்றான். -

அவள் அழகு காட்டி கின் ருள். அவள் காட்டுப் பூ ! குறவர் இனத்தில் அவள் ஒரு செந்தாமரை. அவள்மீது ஏனைய குறவர்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு.

‘வஞ்சி, இன்னிக்கு கம்ப கண்ணுலத்தைப் பத்தி உங்கிட்டே உண்டு இல்லை’ன்னு ஒரு முடிவு கேட்டிர ரோசிச்சிருக்கேன்’ என்றான் மாடன்.

  • மச்சான், வெளுத்ததெல்லாம் பாலுன்னு கம்பலாமா என்ன? ஒங்கிட்டேயும் பேருக்கு அஞ்சு, பத்து வெள்ளிப் பணம் உருண்டுதானு, கேத்திக்கு உங்க அண்ணுச்சி எங்கிட்ட அப்படிக் கேப்பாரா? அவருகிட்ட ரொம்பப் பணம் இருக்குதாம்; அவருக்கு எம்மேலே கண்ணுபோலேருக்கு. பூடகமாச் சொன்னுரு. நான் முடிவாச் சொல்லிப்பிடறேன். நீங்களும் கையிலே கொஞ்சம் பணம் சேர்த்ததும் கம்ம ரெண்டு பேரும் கண்ணுலம் பண்ணிக்கலாம் மச்சான்.”

வஞ்சி மேல்பூச்சாகக் கூறியதைக் கேட்ட மாடன், ஒரு கணம் சிலையானன். தான் விரும்பும் பெண்ணைத் தன் தமையனும் அடைய வலையோடுகிருன் என்ற செய்தி. அவனைத் துயரத்திற்குள்ளாக்கியது. - - - - - ‘அண்ணளுமில்லே அண்ணன்......அந்தப் பயல் எனக்கு அண்ணளு? ஊஹ-ம்; எல்லாம் வெளிவேஷம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/140&oldid=684304" இலிருந்து மீள்விக்கப்பட்டது