பக்கம்:வேனில் விழா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 141.

தினமும் பாம்பு, மகுடி சகிதம் ஊர் சுற்றி வருவான். வரும் போது அவனுடைய சுருக்குப் பையாகிய கஜாளுவில் பல காசுகள் இன்பஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்.

மாடனுக்கும் வயது வந்தது காதல் பண்ணிஞன்”, வஞ்சியின் வலையில் சிக்கின்ை. ஆளுல் முடிவில் பார்க்கப் போனுல் வஞ்சிக்கொடியை அடையப் போட்டி!-அதுவும் அவன் கூடப்பிறந்த சகோதரனே போட்டி போட்டான்.

எண்ணச் சுழற்சியில் மாடனின் மனம் கிளே தாவியது; கண்களில் கண்ணிர் வேலி கட்டியது. அவன் மருண்டு கின்றான். வெளியே கப்பியிருந்த இருளை மின்னல் கீற்று ஒன்று கிழித்துச் சென்றது. சற்று கேரத்தில் ஒளி பரவி மறைந்தது. மீண்டும் அதே இருள் திரள். அதேபோல அவனுக்கு ஒரு யுக்தி மின் வெட்டியது; அல்ல-பழி சுற்றுச் சூழ்நிலையை அவன் மறந்தான். தன்னை இது காறும் ஆளாக்கிய அண்ணனை அடியுடன் மறந்தான். ஆளுல் அந்த வஞ்சிதான் அவன் ஸ்மரணையில் கின்று உணர்வூட்டி கின்றாள். மாடன் தன் அன்பை, பாசத்தை, உள்ளத்தை-ஏன் எல்லாவற்றையுமே அந்த ஒரு வஞ்சி யின் கிமித்தம் திரணமாக எண்ணினுன்.

மாடன் சூதாடினன். அவனுடைய சூதுப் பொருள் என்ன தெரியுமா? அதுதான் அவனுடைய தமையன் முரு குவின் உயிர்! பழி; வஞ்சம்! அவனது மனப் பாம்பு ஊர்க் தது; படமெடுத்தது. காலைச் சுற்றின பாம்பு கடிக்காம லிருக்குமா? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...! தனக்குப் போட்டியிடும் அண்ணன் ஒழிந்து போவான்; பிறகு வஞ்சி விரும்பும் பணம் கிட்டும்; அதற்கப்புறம் வஞ்சியே கிடைத்து விடுவாள். ஆகா! அவன் மனம் சிலந்திவலே பின்னியது. . . . . . .

தம்பி...”

‘அண்ணுச்சி?”

“அப்பவே புடுச்சு அலட்டுறேனே.கேக்கல்லியா...”

“தூங்கிப்பூட்டேன். என்ன சேதி? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினன் மாடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/142&oldid=684306" இலிருந்து மீள்விக்கப்பட்டது