பக்கம்:வேனில் விழா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I42 மையலும் தையலும்

மேலுக்கு முடியலே. என்னமோ போல வருது, கொஞ்சம் சுடுதண்ணி வச்சுக் கஞ்சி காச்சித் தர்றியா?” வெள்ளே உள்ளத்துடன் பேசினன் முருகு.

“ஆகட்டும் அண்ணுச்சி.”

அடுப்புப் பற்றவைத்து மாடன் கஞ்சி தயாரித்தான். பிறகு குவளையில் ஊற்றி ஆற வைத்தான். மறுபடியும் உள்ளே சென்று ஏதோ ஒன்றை எடுத்து வந்து கஞ்சியில் தூவிக் கலந்தான். அவன் கைகள் கடுங்கின; உடல் வியர்த்துக் கொட்டியது.

குவளையைத் தொட்டுப் பார்த்தான். சூடு தாளவில்லை. ஆறட்டுமே என்று பொறுத்திருந்த அவனுக்குத் தூக்கம் சுருட்டிக்கொண்டு வந்தது; துரங்கிவிட்டான் போலும்!

சற்றைக்கெல்லாம் ‘தம்பி...தம்பி...” என்று முருகு அலட்டினன். அலறல் கேட்டுக் கண் விழித்தான் தம்பி மாடன். . .

‘தம்பி, கான் உனக்கு என்ன தீவினை செஞ்சேன்... ஏதுக்கு என்னே இப்படிச் சந்தேகப்பட்டே? உன் சந்தோ ஷம் ஒண்டியேதான் என் மூச்சுண்ணு எண்ணிப் பூரிச்சிருங் தேன். ஆளு நீ என்ன இப்படி உசிரோட் கொல்ல கினைப்பேயின்னு துளியும் எண்ணலையே...அதுதான் கீ மன சிலே முடிச்சிருந்ததை உன்னையறியாமல் தூக்கத்திலே உன் வாய் வெளியே கொட்டிருச்சுதே! தம்பி, ஒங்கிட்டே ரெண்டு, மூணு நாளு முக்தியே சொல்லியிருக்கவேணும். அந்தப் பொண்ணு வஞ்சியை ஒனக்கே கண்ணுலம் செஞ்சு வச்சிர வேணுமின்னு கேத்திக்கு அதுகிட்டே அளப் பறிஞ்சு பார்த்தேன். ஆளு என் கெட்ட காலம் என்னைச் சம்சியிச்சுட்டது போல. அத்தோடே என்னைப் பத்தியும் உங்கிட்டே அவதூறு சொல்லியிருக்கு தம்பி, நீயும் வஞ் சியும் சந்தோசமா இருங்க. அதுவே என்னுடைய ரொம்ப காளையக் களு. உள்ளே கலயத்திலே அம்பது ரூபாய் பணம் இருக்கு; எடுத்துக்க... தொடர வகையின்றி அவன் வார்த்தைகள் உதட்டுடன் ஒட்டிவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/143&oldid=684307" இலிருந்து மீள்விக்கப்பட்டது