பக்கம்:வேனில் விழா.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

என்ன தோன்றியதோ, மாடன் சடக்கென்று அண் ணனின் தலைமாட்டில் இருந்த கஞ்சிக் குவளையைப் பார்த் தான்; அது காலியாகவிருந்தது! ‘பக்’கென்றது மாட னுக்கு. அவன் மனச்சாட்சி அவனத் தூண்டில் போட்டு இழுத்தது. -

அகல் விளக்கின் மங்கல் ஒளியில் முருகுவை நோக்கி ஞன் ; அவனுடைய இமைகள் மூடியிருந்தன. பேச்சு மூச்சற்றுப் பிரேதக் கணக்கில் அவன் கிடந்தான்.

அண்ணுச்சி! ஐயோ! நான் பாவி! Qrrgir.” என்று ஓலமிட்டான் மாடன். உச்சாணிக் கொம்பில் அக்தரத்தில் கால் தவறித் திணறுபவனைப் போன்று அவன் தத்தளித்தான் ; பதறிஞன். வெளியேமேகங்கள் வானத் துப் பாசறையில் போர் முரசம் கொட்டின. முகில் வானம் மழை பொழிந்தது. .

அதே கணத்தில் “மச்சான்!” என்ற சப்தம் கேட்டது. மாடன் பிரமித்துத் திரும்பிப் பார்க்கலாஞன். பதட்டத் துடன் பூங்கொடி வஞ்சி நின்றிருந்தாள்.

“ உங்க அழுகை சத்தம் கேட்டுது. உசிரே போயி ருச்சு எனக்கு! ஒடியாக்தேன் ‘ என்றாள் வஞ்சி.

தேரையைக் கவ்வும் பாம்புபோல மாடன் வஞ்சியின் கழுத்தில் கையைக் கொடுத்துக் குரல்வளையைப் பற்றி

‘பாவி மகளே, என் மனத்தை மாற்றி, என் அண்ணனை யும் சாகடிச்சிட்டியே!...பாதகி.அதுக்குப் பழி டங்கிட்டே வாங்கிளுத்தான் எனக்கு மனசு ஆறும்...”

வஞ்சியின் ஒலம் வளர்ந்தது. அப்போது ‘தம்பி...” என்ற மெல்லிய குரலே அவன் கேட்டான். கேட்டதுதான் தாமதம், அவன் பிடி தளர்ந்தது. ‘அண்ணுச்சி!” என்று கூவியழைத்து ஓடினன். - . . . . .” “அண்ணுச்சி, நீங்க பிழைச்சுட்டிங்களா? அந்தக் குட்டிமேலே கொண்ட ஆசையிலே உங்க உயிருக்கு உலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/144&oldid=684308" இலிருந்து மீள்விக்கப்பட்டது