பக்கம்:வேனில் விழா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்சாட்சி

“ஜீவன்லால் ட்ரக் ஸ்டோர்ஸ் என்ற போர்டைக் கண்டதும், பூவம்மாவுக்கு ஒருவகை அமைதி கிறைந்தது. கொதிக்கும் வெயிலில் கால் நடையாக தண்டையார்ப் பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடுக்கு கடந்து வந்ததன் அயர்வைப் போக்கியது அந்த விளம்பரப் பலகை, பெரு மூச்சு விட்டாள் ; வியர்வைத் துளிகளைச் சேலைத் தலைப்பில் அடைக்கலம் புகச் செய்தாள்.

மருந்துக் கடையின் முதல் படியைக் கடக்கும்போதே, வலது கால் இடறி விட்டது. அவளுக்குக் கண்களில் கண்ணிர் முட்டி வந்தது. பச்சை ஆத்தா !” என்று விளித்தாள். சேலை முக்தானையைத் தேடி எடுத்தாள். முடிச்சிட்ட தலைப்பு எதுவும் அவள் கைக்குப் பிடிபடவே யில்லே. உயிர் போய்விட்டதுபோல் இருந்தது அவளுக்கு. * ஐயோ !” என்று கதறினுள். மச்சான் !’ என்று கூப்பாடு போட்டாள். - ... . . .

அவளுடய மச்சான் தோன்றின்ை-மனக் கண்ணிலேபாயும் படுக்கையுமாக. அவளுடைய கரம் பற்றியவனுக்கு ஆறு நாட்களாகத் தீராத-மாளாத காய்ச்சல். மருந்துக் கடையில் மிக்ஸ்சர் வாங்கி ஒருவேளே கொடுக்கக்கூட அவளிடம் வக்கு இல்லை. அவள் மட்டும் என்ன, அவன் கூடத்தான் ! அன்றாடம் ரிக்ஷா இஸ்த்துக் கிடைக்கும் ஒரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/146&oldid=684310" இலிருந்து மீள்விக்கப்பட்டது