பக்கம்:வேனில் விழா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மனச்சாட்சி

ரூபாய், ஒண்ணரை ரூபாய் துட்டு அவனுக்கும் அவளுக் கும் வயிற்றுப் பாட்டுக்குப் பதில் சொல்லுமா ?

சுயநினைவைத் தூண்டில் போட்டு இழுத்தாள் பூவம்மா. தன்னையும் மீறிய அழுகை எரிமலையாக வெடித்தது. கையில் வழி தப்பிக் கிடந்த சேலைத் தலைப்பை அலுப்போடு வீசினுள். இடுப்பில் சொருகியிருந்த டாக்டர் எழுதித்தந்த மருந்துச் சீட்டைப் பிரித்தாள். அவளுக்கு எழுத்து வாசனையே தெரியாது-அப்படிப்பட்டவளுக்கு டாக்டர் ஒருவர் எழுதித் தந்த மருந்துச் சீட்டை மட்டும் படிக்கத் தெரியுமா, என்ன ?

‘பத்து ரூவா!...பத்து ரூவா!...முழுப் பத்து ருவா கோட்டு...! ஐயோ!'-எண்ணங்கள் குமுறின, சுற்று முற்றும் பார்வையிட்டாள். மிருந்துச் சீசாவும் கையுமாக அவரவர்கள் வந்து:போய்க்கொண்டிருந்தார்கள்.

“என் மச்சானுேட காச்சல் தீர வளி என்ன?’ என்று ஒரு கேள்வி அவள் கெஞ்சடியிலிருந்து புறப்பட்டு எதிரொ லித்தது. சூன்யம் எதிர் காலத்தின் விளிம்பில் கின்று கைகொட்டிச் சிரித்தது.

பூவம்மாவால் சிரிக்க முடியவில்லை அப்படி! தன்னைப் போன்ற ஒரு பெண்-அந்த டாக்டர் அம்மா மட்டும் எப்படிச் சிரித்தாள்? அவளுக்கு இதயம் இல்லையா? இருக் திருந்தால், தன் மச்சானே வந்து பார்த்து நோய் தீர வழி சொல்லும்படி கண்ணிரைக் காணிக்கை செலுத்திக் கெஞ் சிக் கதறியழுத அவளிடம், போ, போ! இப்போது எனக்கு டைம் இல்லை. வேறு யாராவது ஒரு டாக்டரைப் பார்!’ என்று முகத்தில் அறைந்த மாதிரி கூறுவாளா?

பூவம்மாவுக்குத் தலை திரும்ப முடியவில்லை, இமயமலை -யின் எடைக்குக் கனத்தது. கண்கள் திரும்பின; அவற்றின்

பிண்ணணியில் கண்ணிர் வெள்ளம்!

என்ன ஆச்சரியம்!

பூவம்மாவுக்குத் தான் காண்பது கனவா, கனவா என்று

புரியவில்லை. அவன்னதிரே கின்ற அந்தப் பெண் கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/147&oldid=684311" இலிருந்து மீள்விக்கப்பட்டது