பக்கம்:வேனில் விழா.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மனச்சாட்சி

யிலே! எல்லாம் வேடிக்கைக் கதையால்ல இருக்குது? அந்தக் கமலம் டாக்டரம்மா கிட்டே கெஞ்சாத கெஞ்சு கெஞ்சினேன்; மசியல்லே. பொம்பளையா அவள்?... இரக்கமத்த பாவி என் மச்சானைப் பார்த்து ஊசி போடக் கூப்பிட்டேன், வரல்லே. இப்ப வேறே டாக்டர் கிட்டே போய் சீட்டு எழுதியாரேன். கீ என்னுன்ன, என் வயத் திலே மண் அடிக்கப் பார்க்கறே?...” என்று எதிர்க்கட்சி பேசினுள் அந்தப் பெண்-ஆமாம்; அங்கம்மாப் பெண்!

பூவம்மா பாவம், எப்படிப் பேசுவாள்? ‘டாக்டர் கமலம்!’-இந்தச் சொல் அவளுள் எதிரொலி பரப்பியது. மத்தியான்னம் அவள் டாக்டர் கமலத்தைப் பார்த்து தன் மச்சானின் காய்ச்சலுக்கு மருந்து தரும்படி எவ்வளவோ வேண்டிளுள். அவள் அசையவில்லை. முடியாது’ என்று அனுபபி விட்டாள். ‘பாவி’ என்று திட்டிக்கொண்டு பூவம்மா வேறு டாக்டரைப் போய்ப் பார்த்தாள்.மருந்துக்குப் பெயர்-நோய் தீர வழி செய்யப்பட்டது. ஆளுல் வழிகாட்டி திசை தப்பி மறைந்து விட்டானே?

அங்கம்மா கர்வப் புன்னகை தளும்ப, தளுக்கு கடை கடந்து கவுண்டரை அடைந்தாள். பூவம்மாவுக்கு ஆத் திரம் பீறிட்டது. ‘பச்சை ஆத்தா! நானு பொய் சொல் றேன்? அவள்தானே பொய் சொல்ரு? நீ பார்...! என்று எண்ணமிட்டவளாக அங்கம்மாவை நெருங்கி, அவள் கையிலிருந்த அந்தப் பத்து ரூபாய் சலவை கோட்ட்ை’ப் பிடுங்கப் போளுள். பெண்கள் இருவரும் பேய்களாஞர்கள்; ஆண்கள் பேயாட்டத்தில் லயித்தனர், வெட்கம்! -

அப்பொழுது-வாசலில் கின்ற கெடிலாக் மோட்டார் குரல் கொடுத்தது. ‘கில்!” என்று டாக்டர் கமலம் இறங்கி வந்தாள். மறுகணம், “அடேடே, கானும் இத்தனை நாழி உங்கள் சண்டையைக் கேட்டுக்கொனடுதான் இருக்கி றேன். ஐயோ, பாவம்! இதோ பார்! பத்து ரூபாய் கோட் டுக் கிடக்கிறது!...இதுவும் புதுத் தாளாகத்தான் இருக் கிறது. இது யாருடையது?... அதிசயமா யிருக்கிறதே! இதில்கூட பச்சைக் கறை படிந்திருக்கிறதே?...’ என்று. வினவினுள் டாக்டர் அம்மா. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/149&oldid=684313" இலிருந்து மீள்விக்கப்பட்டது