பக்கம்:வேனில் விழா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 149

பூவம்மாவும் அங்கம்மாவும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார்கள். ஆச்சரியக் குறிகள் இரண்டு கொக்கி யிட்டு இணைந்தன!

இரண்டு பத்து ரூபாய்த் தாள்களும் விசித்திர பாவம் துலங்கப் புன்னகை தெளித்தன!

மறு விடிை, பூவம்மா அந்த டாக்டர் அம்மாவைப் பார்த்தாள் ஆத்திரம் வெடிக்க அதே தருணம், அங்கம்மா வும் அதே டாக்டரம்மாவைப் பார்த்தாள், மாளாத ஆத்திர வெறி தாளாமல்!

டாக்டர் கமலம் எம். பி. பி. எஸ். விஷமப் புன் சிரிப் புடன் அவர்கள் இருவரையும் நெருங்கிச் சொன்குள்: “பூவம்மா, அங்கம்மா! நீங்கள் இருவரும் என்னைக் கோபிப் பீர்கள்-எனக்குத் தெரியும். அங்கம்மா, கீ வைத்திருக்கும் பத்து ரூபாய் கோட்டை நீயே வைத்துக் கொள்! பூவம்மா இந்தப் பத்து ரூபாய்த் தாளே நீ வைத்துக் கொள்! எப் படியோ அவரவர் பணம் அவரவருக்குத் திரும்பி விட்டது! நானும் பெண்தான்! உங்கள் இருவரின் குறையையும் அறியாதவளல்ல நான். நீங்கள் இரண்டு பேரும் தனித் தனியே வந்தபோது, என் கணவரின் உடல்கிலே ரொம்பவும் கவலைக்கிடமாயிருந்தது. அதனுல்தான் முடியவில்லை. கடவுள் கிருபையில்ை, இப்போது என் கணவர் மறு பிறவி பெற்று விட்டார். உங்களைத் தேடித்தான் புறப்பட்டேன். காரில் ஏறிக் கொள்ளுங்கள் இருவரும். இப்போதே உங்கள் இருவரின் கணவன்மார்களையும் பரீட்சை செய்து நோய். தீர என்னுல் ஆனதைச் செய்கிறேன்......ம்...புறப்படுங் கள்|*

அடுத்த இரண்டாவது கிமிஷம் ஜீவன்லால் மருந்துக் கடையில் இந்த எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது! -

“டாக்டரம்மா, என்ன மன்னிச்சிடுங்க இந்தப் பணம் என்னுேடது இல்லே’ என்று சொல்லி விம்மிளுள் அங்கம்மா.. - ... . . .

அம்மா, அம்மா! என்னேயும் மன்னிச்சி இங்க்: முதலிலே கான் கர்னுேமின்னு சொன்ன பத்து, ரூவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/150&oldid=684315" இலிருந்து மீள்விக்கப்பட்டது