பக்கம்:வேனில் விழா.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மனச்சாட்சி

கோட்டுக.ட என்ளுேடது இல்லே. அது உங்க வீட்டுக் காம்பவுண்ட் சுவர்ப் பக்கம் எடுத்தது தானுங்க!” என்று அழுதாள் பூவம்மா.

“பூவம்மா, நான் வச்சிருந்த பத்து ரூவா கோட்டு உன் சேலைத் தலைப்பிலேருந்து திருடினது தான்! என்ன செய் யட்டும், என் புருசன் கிலே என்னை அப்படிச் செய்யத் தூண்டிருச்சு. பாவம், என் மாதிரிதானே உன் மனசும் வெந்திருக்கும்!” என்று சொல்லிப் பத்து ரூபாய் கோட்டை பூவம்மாவிடம் நீட்டினுள் அங்கம்மா.

“இங்தாங்க டாக்டரம்ம கொஞ்சம் முக்தி கீழே கிடந்த தின்னு நீங்க காட்டின பணமும், அங்கம்மா இப்போ கொடுத்த பணமும் இருக்குது, இந்த ரெண்டு பத்து ரூவா கோட்டுக்கும் சொந்தக்காரங்க வேறே யாரோ? அவங்க பாவம், பணத்தைக் காணுமலடிச்சுப்பிட்டு என்ன சங்கடப் படருங்களோ?...” என்று சொல்லி, இரண்டு பத்து ரூபாய் கோட்டுக்களையும் டாக்டர் கமலத்திடம் நீட்டினுள் பூவம்மா.

‘அம்மா, கோடிப் புண்ணியம் உண்டு, சீக்கிரம் புறப் படுங்க!’ என்று துரிதப்படுத்தினுள் பூவம்மா.

‘ஜல்தி பண்ணுங்க, தாயே!” என்றாள் அங்கம்மா. “ஏன் பூவம்மா! இந்தா அங்கம்மா! தவறு செஞ்சவங் களுக்கு தண்டனை கிடைக்க வேண்டியதுதானே கியாயம்?” என்றாள் டாக்டர் கமலம்,

பூவம்மாவும் அங்கம்மாவும், ஆமாங்க, அம்மா!” என்று பதிலிறுத்தனர்.

“பேஷ்! அப்படி யென்றால், கான்தான் தவறு செய்த வள்! உங்களுடைய இரு உள்ளங்களுக்கும் உரிய சமயத் தில் அமைதி உண்டாக்க இயலாமல் போய்விட்டே னல்லவா? அதற்கான தண்டனையை இப்போது பணத்தின் ரூபத்தில் உங்களுக்குச் செலுத்தப் போகிறேன். இந்தா ருங்கள், ஆளுக்குப் பத்து ரூபாய் இந்து இரண்டு பத்து ரூபாய் கோட்டுக்களும் என்னுடையதே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/151&oldid=684316" இலிருந்து மீள்விக்கப்பட்டது