பக்கம்:வேனில் விழா.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் I 5.1

‘பூவம்மாவுக்கு என்னுல் உதவ முடியாது போயிற்றே என்ற வேதனையினுல்தான், என் பணமாவது அவளுக்கு ஆபத்துக்கு உதவட்டுமே யென்று புதுப் பத்து ரூபாய் கோட்டை மாடியிலிருந்து கீழே வீசினேன். அவள் கையில் கிடைத்தது அது. சற்றுமுன் தரையில் கிடந்ததாகக்கூறி நான் காட்டிய அங்தப் புதிய பத்து ரூபாய்த் தாளையும் பச்சை மையினுல் கறைப் படுத்தி, நானேதான் அப்படி யாரும் அறியாமல் வீசி எறிந்தேன்!......குற்றம் செய்வது சகஜம், ஆளுல் அதை உணர்ந்து திருந்திக் கொள்வது தான் ரொம்பவும் முக்கியம். நீங்கள் இருவரும் துளிக்கடிடக் கவலைப் படாதீர்கள். உங்கள் இருவரின் தாலி பாக்கியம் கெட்டியாக இருக்க அம்பிகை அருள் புரிவ்ாள்!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறிய விண்ணம் ஆளுக்கொரு பத்து ரூபாய் கோட்டை நீட்டினுள் டாக்டர் கமலம்!

“டாக்டர் அம்மா!’ என்று இரட்டைக் குரல்கள் விம்மி வெடித்து விண்ணைச் சாடின! -

மனச் சாட்சி மூன்று தனித்தனிப் புள்ளிகளிலே கின்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/152&oldid=684317" இலிருந்து மீள்விக்கப்பட்டது