பக்கம்:வேனில் விழா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊஹஅம்.

சிவர்க் கடிகாரம் ஐந்து முறை அடித்தது; ஓய்ந்தது. ரவீந்திரனின் இதயமும் ஐந்து தரம் அடித்துக் கொண்டது; ஆளுல் ஓயவில்லை. நீள் மூச்சும், விழி நீரும் ஒன்றினை பொன்று போட்டியிட்டவாறு புறப்படலாயின. அவை இரண்டும் சங்கமம் ஆயின. விந்தைதான். அதன் விளைவு என்ன தெரியுமா? ‘டங், டங்’ என்று ஒலி எழுந்தது. எங்கே? அவனுடைய மண்டையோட்டிலே நெற்றிப் பொட்டு விட்டுப் போய் விடுவதைப் போல அப்படித் தெறித் தது. தலையை இரு கைகளாலும் அழுந்தப் பிடித்துக் கொண்டான் அவன். கைகள் வலித்தன. தலையின் வலி கரங்களுக்குக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விட்டதோ? வேண்டாத சிந்தனே! பைத்தியக்காரன் !’ - தனக்குத் தானே ரவீந்திரன் பேசிக்கொண்டான்.

“சரிதான்; ஏந்திரு ஸார். கேரமாச்சு; கிளம்பின்னு சொன்ன, நீ கம்பளையே பைத்தியக்காரன்னு சொல்லிக்கினு இருக்கீயே, ஸார்?”

அவன் தலையை கிமிர்த்தினன். தலைவலி போய்விட வில்லை; தலைவலி போய்த் திருகுவலி வந்துவிட்டதோ என்று ஆராய்ந்து உணரவே அவ்வாறு செய்தான். அலுவலகப் பணியாள் கின்றான். எள்ளும் கொள்ளும் அவன் கையில் காட்சி தரவில்லை; ஆலுைம், அவனுடைய முகத்தில் எள் கும் கொள்ளும் வெடித்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/153&oldid=684318" இலிருந்து மீள்விக்கப்பட்டது