பக்கம்:வேனில் விழா.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

ரவீந்திரனின் மனம் விம்மிப் புடைத்தது; வேதனையின் கெட்டுயிர்ப்பு வெடித்தது; அழுதான்; அழுதான்!

“ஏன் அவள் போய்விட்டாள்? எங்கே அந்த உருவத் தைக் காணுேம்? யார் அந்த உருவம்?...’

‘ஆருயிர்ப் பொன்னழகி !

கம் இருவருடையை காதலுக்கும் அறிமுகத் தலமாகி, புனிதக் கோயிலாகக் காட்சி தரும் முண்டக்கண் ணியம்மன் சங்கிதியிலே இன்று மாலே ஆறு மணி அளவில காம் சந்திப் போம், உனக்காக நான் காத்துக் கொண்டேயிருப்பேன். உன் வழியில் என் விழிகள் காத்துத் தவம் கிடக்கும். மறந்து விடமாட்டாயே, கண்ணே?...மறுத்து விடலாகாது, பொன்னே! wo

இப்படிக்கு, உன் அன்புக் காதலன்.

ரவீந்திரன் அக்கடிதத்தை மடித்துச் சட்டைப் பைக் குள் திணித்துக் கொண்டான். வேர்த்துக் கொட்டிற்று. கைபிடித்துண்டு முகத்தைத் துடைத்தது; முகத்தில் படிங் திருந்த-பதிந்திருந்த தொல்லையைத் துடைக்க முடிய வில்லை!

வி. எஸ். வி. கோயில் தெருவில் இருந்தது அந்த வீடு. நுழைவாயிலில் அடி தொடுத்து வைத்தான் ரவீந்திரன். யம பட்டணத்தில் கால் பாவுவது போலிருந்தது அவனுக்கு. நேற்று இந்நேரத்தில் அவன் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தான்?... சொர்க்கத்தின் தலைவாசலிலமர்ந்து ஆனக் தக் கடலாடிஞனே அவன்? அவனும் அவளும் டிக்காக’ உடுத்துக் கொண்டு டாக்ஸி அமர்த்தி எல்பின்ஸ்டனுக்குச் சென்று திரும்பினர்களே?... உள்ளத்தின் துன்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடாத நிலைக்கு உள்ளான தருணத்தில், மனத்தின் இன்னல் கண் வட்டங்களில் ஓய்வு கொண்டு கண்ணிராய் வழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/156&oldid=684321" இலிருந்து மீள்விக்கப்பட்டது