பக்கம்:வேனில் விழா.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஊஹஅம்!...

அப்போது, அத்தான்! வந்திட்டீங்களா? ஏன் இன் னிக்கு இவ்வள்வு நாழி?...” என்று தேன் குரல் உதிர்த்துத் தோன்றினுள் பொன்னழகி.

ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

அவள் தேடக் கிடைக்காத தெய்வமா? அப்படித்தான் அவள் அழகு கூட்டித் திகழ்ந்தாள். விழி வளைவுகளில் கருவளையங்கள் நெளிந்திருந்தன. எம்பிராய்டரி நூல், ஊசி, வளைவுச் சட்டம், பனிக்குல்லாய் முதலியன அவன் பார்வைக்கு ஆஜராயின.

“அத்தான்!...

ரவீந்திரன் கண்களை லாகவமாகத் துடைத்துக் கொண்டு விட்டான்! கெட்டிக்காரன்!

y;

‘கெட்டிக்காரி இவள்! ஆடம்பரமாக டிரஸ் செய்து கொண்டு, தன்னுடைய காதலனைப் பேட்டி காணப் போய் விட்டு, ஏமாற்றததுடன் திரும்பிய சுவடு தெரியாமல், என் னிடம் நடிக்கிருளே? பலே கெட்டிக்காரி!’

“அத்தான்!...

“ஆமா, ஆமா!’

அவன் டை'யை அவிழ்த்தான். அவள் உதவிள்ை. தங்கக்கரங்களே வெட்டிப் போட்டு சூப்’ வைத்துக் குடித்து, அல்ல, வாயில் ஊற்றிக் கொண்டு, ஒரு விடிை வைத்துக் கொண்ட பிறகு, காறித் துப்பிவிடத் துடித்தது அவனது உள் மனம். கத்திக்கு எங்கே போவான்?.., சூப்’ வைக்க வும் தெரியாதே? பாவம்...!


“பூட்ஸ், லாக்ஸ்’ ஒதுங்கின. கைப் பைக்குள்ளிருந்து கதம்ப மலர்ச்சரம் எட்டிப் பார்த்தது. புதுமணம். இந்தா சாமி, பூ மறந்திட்டுப் போlயே?’ என்று நினைவுக் குறிப் பாகிமீட்டிய வாடிக்கைப் பூக்காரியின் முகம் மனக்கண்ணில் தெரிந்தது. எரித்துவிடத் துடித்தான். அவனுக்கு நெற்றிக் கண் இல்லை; கடைசிப் பட்சம், தீப்பெட்டியில் கடைசிக் குச்சியாவது இருந்திருக்க கூடாதோ? சே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/157&oldid=684322" இலிருந்து மீள்விக்கப்பட்டது