பக்கம்:வேனில் விழா.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஊஹாடும் !.

‘வஞ்சகி!-ஓங்கிய குரலில் கூவி அலற நினைத்தான்; ஓங்கி அலறவில்லை; ஓங்கி அறைந்தான்! உடல் தத்தளித்த கிலையில், சட்டைப் பையிலிருந்த பார்க்கர்’ புதுப்பேனு தரையில் வீழ்ந்தது. முதல் தேதி இந்தப் பேைைவ அவள் தன் சிறுவாட்டுப் பணத்தில் அல்லவா வாங்கி அவனுக்குப் பரிசளித்தாள்...?

கதம்ப மலர்ச்சரம் அவனைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தது!

அதே வேளையில், வெறொரு சிரிப்பொலியும் கேட்டது.

ரவீந்திரன் அதிசயப் பட்டான். ‘யார் சிரிப்பது? பொன் னழகி அல்லவா சிரிக்கிருள்?

பொன்னழகியின் விழி விளிம்புகளில் நீர்த்திரை படர்க் திருந்தது. அவள் அவனை அண்டி வந்தாள். மார்பகம் விம்மித் தணிந்தது. அத்தான், உங்களுக்கு ஒரு லெட்டர்

வந்திருக்குதுங்க...!”

கீட்டிய கடிதத்தை ரவீந்திரன் ஏந்தினன்; படித்தான். “அன்பு நிறைந்த காதலரே, என் முதற் காதலை வாழவைத்த தெய்வம் நீங்கள். உங்களை என் ஆயுள் உள்ள மட்டும் மறவேன். காம் கேரில் பேசிக் கொண்டபடி, கம் திருமணத்துக்கு உடனடி யாக ஆவன செய்யுங்கள். இது உங்களுக்கு கினேவின் குறிப்பாக அமைய வேண்டும். பிற கேரில்.

இப்படிக்கு, உங்கள் அடியாள்.’ ரவீந்திரனுக்கு ஒரு கிமிஷம் உலகம் சுழன்றது; அந்தச் சுழற்சியின் விளையாட்டு ஓய்ந்தபோது, அவனுக்குத் தன் னுணர்வு வழிவிட்டது. -

“இந்த லெட்டர் முன்பு எனக்கு எழுதியதுதானே?”

“ம்” என்று சொல்லிக் கொண்டே, அவனை நெருங்கி குள் அவள் அவனது சட்டைப் பையிலிருந்த அந்தக் காதல் கடிதத்தை எடுத்தாள். “இது...?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/159&oldid=684324" இலிருந்து மீள்விக்கப்பட்டது