பக்கம்:வேனில் விழா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 15

சாரங்கன், உங்களை எனக்கும் ரொம்பப் பிடிச்சிப் போச்சு!...” -


நற்கனவுகள் ஒளி வட்டமெனச் சுற்றிச் சுழன்று, கடைசியில் பொற்கனங்களாக உருமாறி மனக்குகை வெளியிலே ஓய்வுகாணும் நிலையில், மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணமிட்டுப் பார்க்கும் தருணத்தில், உரு வாகக்கூடிய அமைதிக்கு ஆதங்கத்திற்கு ஆறுதலுக்கு ஈடு எடுப்பு இருக்கக்கூடுமென்று நீங்கள் கினைக்கின்றீர் களா?

மிட்டாயைத் தின்று முடிந்ததும், குழந்தை நாக்கு நுனி யினுல் இதழ்க் கரையைத் தடவிக்கொடுத்து, மிச்சம் சொச்சமிருக்கும் இனிப்புச் சக்தியைச் சுவைக்கும். -

இனிய காலத்தின் கழிவை மனிதன் கினைத்து முடித்த தும், அவனையும் கேட்காமல் அவனது இமையோரங்களிலே முத்துச்சரம் வளைவுகட்டித் திகழ்வது இயல்பு. அதை அவ னதுங்கிக்கண் மெல்ல மெல்ல வழித்துவிடும். இவனுக்கும் மிட்டாய் சாப்பிட்ட நிலைதான்!

தோல் பெட்டியைக் கையில் பிடித்தவாறு வாசல் நிலைப் படியைத் தாண்டினன் சாரங்கராஜன். பட்டணத்தில் வேலைக்கு உத்தரவு வந்திருந்தது. தெய்வத்தை நினைத்து, மகன் நெற்றியில் நீறு, தீட்டினுள் அலமேலு அம்மாள். தந்தையின் ப்டத்தைத் த்ொட்டு வணங்கிவந்த் அவனுக்குக் கண்கள் கலங்கின் பெற்றவளிடமிருந்து விடை பெற்றுப் பிரிந்தவனுக்கு மனத்தில் அந்த ஒரு குறை வியூகம் இட்டு வளைத்துக்கொண்ட் இடம் கொஞ்சமா, கஞ்சமா? திலகவதி விஷயமாய் அம்மா கடைசிபரியங்தம் எந்த ஒரு முடிவையும் செர்ல்லவில்லையே, ஏன்?

சுவரில் மாட்டப்பட்டுள்ளி. ‘காலண்டர் தாள்களே யாராவது அன்றாடம் கிழிக்காமல் இருப்பார்களா, என்ன?

-

அலமேலு அம்மாளின் உள்ள

விம்மி வெடித்துக் கொண்டிருந்தது. இனம் புரிந்துகெ * -

வாயுககாத ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/16&oldid=684325" இலிருந்து மீள்விக்கப்பட்டது