பக்கம்:வேனில் விழா.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 159

‘பொன்னழகி, இந்த லெட்டர் நான் உனக்கு முன்பு எழுதின தல்லவா?” கண்ணிர் மாலை நீண்டது. இம்மாலைக்கு மனம் உண்டா?

பொன்னழகி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தாள். ஆமாம்! அசல் ஆனந்தக் கண்ணிர்!

“அத்தான், நான் வாங்கின பேணு சரியாக எழுது கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்க வேண்டிக் கடுதாசி யைத் தேடினேன். அப்போது உங்க லவ் லெட்டர் கிடைச் சுது. ஒரு நாடகம் போட ஓடியது. உங்க காதல் கடிதத் தையே வில்லனுக்கி விட்டேன். கான் எதிர்பார்த்தபடி தான் இந்த நாடகம் சோகத்தில் முடிந்தது. கான் வெற்றி பெற்றேன்! என் கன்னத் தழும்புகள் என் கெலிப்புக்கு அடையாளம் சொல்லும்! வாஸ்தவம்தானே அத்தான்?”

‘கான் தோற்றுவிட்டேன், பொன்னழகி, தோற்று விட்டேன்!” என்று அலறித் துடித்தான் ரவீந்திரன்; அவ ளுடைய கன்னத் தழும்புகளே மாற்ற எண்ணி அவளது மாம்பழக் கன்னங்களைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான்.

ஏதோ வாசனை மிதந்து வந்தது. அது மாம்பழ வாச னேயா, என்ன?

கதம்ப மணம்!

“ஊஹாலிம்! ...சும்மா இருங்க, அத்தான்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/160&oldid=684326" இலிருந்து மீள்விக்கப்பட்டது