பக்கம்:வேனில் விழா.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ஏப் காளி !”

அறந்தாங்கி ஸ்டேஷனில் ரெயில் கின்றதுதான் தாம தம், ரெயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் கிலே யத்தை விட்டு ஊருக்குள் கடந்தான். வெயிலின் வெக்கை சற்று தணிந்திருந்தது; அந்திமயங்கும் வேளை.

ஊரின் முன்னடியிலிருந்த கடையில் சாயா குடித்து விட்டுப் பணத்தை முதலாளியிடம் நீட்டியவண்ணம் *ஏனுங்க, ஆவணத்தாங்கோட்டைவரை து:ணக்கு ஒரு ஆள் வேணும். சில்லரை எதாச்சும் கொடுத்துடலாம்; கிடைக் குங்களா?” என்று கேட்டான் குமாரசாமி.

‘அவசியமான ஒரு ஆளை வரச் சொன்னப் போச்சு’ என்று சொல்லிவிட்டு, ‘ஏய் காளி’ என்று அழைப்பைச் சுண்டிவிட்டான் கடைக்காரன். சோம்பல் முறித்து விசித் தெழுந்த காளியை ஏற இறங்கப் பார்த்தான் குமாரசாமி.

காளி, சீக்கிரம் எழுந்திருப்பா, ஒரு கிராக்கி வங் திருக்கு. பாக்கி துர்க்கத்தைத் திரும்பவங்து மறந்துடாமல் தூங்கிக்கலாம். ஐயாவோட சாலைவரை போகணும்” என்று மேலும் துரிதப்படுத்தினுன் டீக்கடைக்காரன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/161&oldid=684327" இலிருந்து மீள்விக்கப்பட்டது