பக்கம்:வேனில் விழா.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் I61

கந்தலும் கிழுசலுமாகப் பார்க்கப் பரிதாபமாகத் தோற்றம் கொடுத்த காளிக்கும் ஒரு தேத்தண்ணிர் வாங்கிக் கொடுத்துப் புறப்பட்டான் குமாரச மி

அங்தி மங்கல் எங்கும் படர்ந்தது. சூரியனின் கதிர் கள் பொன் ரேக்குப் பெற்றுப் பிரகாசித்தன. இயற்கை கண்ணுமூச்சு விளையாடியது.

மூட்டையை இதம் பதமாகத் தோளில் சாய்த்துத் தலை முண்டாசுக்கு அனைவாக வைத்துக்கொண்டு காளி முன் சென்றான். குமாரசாமிக்கு அவனையும் அறியாமல் காளி யிடம் அனுதாபம் சுரந்தது. வழிப்பயணத்துக்குப் பேச்சு இருந்தால் தொலை-துாரம் தோன் ருதல்லவா? காளியின் வாயைக் கிளறிவிட்டால் ஒருகால் அவனைப்பற்றி ஏதாகிலும் விருத்தாந்தம் புலப்படுமென்ற ஆவல் குமாரசாமிக்கு. மறு வினுடி அவன் இதய சபலத்தைத் துழாவியறிந்தவனுட்டம் காளியே முதலில் பேச வாய் தூக்கின்ை.

‘அண்ணுச்சி, என்ன இப்படி ஒண்டியாய்ப் புறப்பட் டிங்க! ஆன முடிச்சைப் பார்த்தாப் பெலமாக் கனக்குது. வேறு யாரும் உங்க சம்சாரம், பிள்ளைகுட்டி யாராச்சும் வரு வாங்களா? அல்லது முன் னுடியே போயாச்சா?”

இது காளியின் கேள்வி:

சற்றே மறந்திருந்த ஏதோ ஒன்றை அவன் கினைவு படுத்திவிட்டவன் போலக் கணநேரம் குமாரசாமி பேசா திருந்தான். -

‘காளி, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆன என் தங்கச்சிக்கு முதலிலே கல்யாணம் கட்டினப்புறம்தான் என்னைப்பற்றி யோசிக்கணும். தங்கச்சியையும் அம்மா வையும் காலம்பற வண்டிக்கு ரயிலேற்றி விட்டேன். அவ சரமா ஒரு காரியம் எனக்குத் தலைமேலே இருந்துச்சு. அதாலே கான் அவங்களோடு போக வாய்க்கல்லே. எனக் காகக் காத்துக்கிட்டிருப்பாங்க. சொந்தக்காரங்க வீட்டிலே ஒரு சடங்கு. அதுக்குத்தான் போறேன்” என்று குமார் சாமி கூறிஞன். ஊம் கொட்டிக் கேட்டான் காளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/162&oldid=684328" இலிருந்து மீள்விக்கப்பட்டது