பக்கம்:வேனில் விழா.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64 ஏய் காளி !”

அடுத்த நாள். மத்தியானம் கடைத் தெருப் பக்கம் குமாரசாமி சென்

றிருந்தான்; சடங்கு விசேஷம் முடிந்ததால் ஊருக்குப் புறப் படச் சாமான்கள் வாங்கிவரப் போயிருந்தான் அவன்.

வீட்டின் தாழ்வாரத்தில் கைகளால் முகத்தை ஏற்றபடி உட்கார்ந்திருந்தாள். அவன் தங்கை சீவி முடித்திருந்தாள்; புது ஆடை உடுத்தியிருந்தாள். அழகான முகம் பொலி வுடன் விளங்கியது.

குமாரசாமி ஐயா இருக்காங்களா?” என்று கேட்டுக் கொண்டு காளி முன்னே வரலாஞன். திரும்பவும் ரயிலடிக் குப் போக ஏதாவது சான் ஸ்’ தட்டலாம்ல்லவா?

உட்கார்ந்திருந்த அப்பெண்ணை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். யாருடைய முகம் அது? காளி பின்னும் ஓர் அடி முன் எடுத்து வைத்து, அந்த யுவதியை நோக்கின்ை.

‘நெசமாவே கம்ப தங்கச்சியேதான இது?-’

கனவின் தொடுகோட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அவனுக்குச் சுய நினைவு முடுக்கப்பட்டதும், அடுத்தும் ஒரு தரம் அவளைப் பார்த்தான்.”

தன் தங்கச்சியைப் போன்ற அதே சாயல் - அதே முகம் அதே பார்வை. அப்படியென்றால் அவள்தான் அவன் தங்கையா?

அவன் தங்கச்சியை அப்படியே உரித்து வைத்திருக் தது போலிருந்தது அப்பெண்ணின் உருவம். ஆணுல் தன் தங்கச்சி மண்ணுகிவிட்டிருப்பாள் என்பதையும் காளி அவ் வப்போது உணராதில்லை. என்றாலும் சபலம்-பாசம் அவனை ஆட்டிப் படைத்தது. ஆட்டுவித்தால் ஆடாதார் யாரே உளர்? • ,

இனம் விளங்காத பாக்தவ்யம், சிதைந்த எண்ணக் கலவையின் பிரதிபலிப்பென அந்தப் பெண்மீது கனிந்தது காளிக்கு. அவள் அவனுள் இடம் பெற்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/165&oldid=684331" இலிருந்து மீள்விக்கப்பட்டது