பக்கம்:வேனில் விழா.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I65

‘தங்கச்சிஅழைத்த மனம் மணம் பெற்றது; உள்ளம் மலர்ந்தது; உடல் சிலிர்த்தது. காளி பரவசமடைந்தான். நரம்புக்கு நரம்பு புத்துயிர் ஊர்ந்து கிளர்ந்தது.

தங்கச்சி என்ற பாசத்தின் பிணைப்புடன், துல்லிய அன்போடு அந்தப் பெண்ணே இமை கொட்டாது பார்த்து நின்ற காளிக்கு இவ்வுலக எண்ணமே கிடையாது போலும்! அவன் தன்னையும் மறந்து சிரித்தான். ஆமாம்; அவள் உருவிலே அவன் தன் சொந்தத் தங்கச்சி நடமாடுவதை, அழகு காட்டி விளையாடுவதைக் கண் மூடாமல் பார்த்து கின்றான்!

குமாரசாமி கையில் பழங்களுடன் பிரவேசித்தான். வழியில் கின்ற காளியைக் கண்டுவிட்டு, ‘காளி, வாப்பா” என்று முகமன் கூறினன். காளி அப்போதுதான் உணர்வு பெற்றான்.

தமையன் வந்ததும் ஒதுங்கி கின்ற அப்பெண் சாமான் களே உள்ளெடுத்துப் போனுள்.

“ஐயா, கொஞ்சம் தாகத்துக்கு வேணும்’ என்றான் காளி.

உண்மையில் அவனுக்குத் தாகமில்லை. ஆணுல் அவள் கையால் ஒரு மிடறு தண்ணிரேனும் அருந்த வேண்டுமென் றிருந்தது அவனுக்கு. தண்ணிர், செம்பில் கொணர்ந்தாள் 10 solo 35,

அவள் நீட்டிய செம்பைக் கை நீட்டி வாங்கின காளி யின் விரல்கள் அவளது பூக்கரங்களைத் தீண்டின. அவன் புளகித்தான்; பூரித்தான்; பாச வெள்ளம் கரை புரண்டது. தன் தங்கச்சியுடன் கழித்த அந்த நாட்கள் மனத்தில் கிழ லாடின. அவன் அவளை உவகையுடன் திருஷ்டி செலுத்தி ஞன். ஆளுல் பதிலுக்கு அவள் விழித்த கோக்கிலே ஏன் இத்தகைய புயல்? சூருவளி?

துவண்டு மறையும் மின்னலென அவள் மறைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/166&oldid=684332" இலிருந்து மீள்விக்கப்பட்டது