பக்கம்:வேனில் விழா.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 * ஏய் காளி !”

‘அண்ணுச்சி’

ஏககாலத்தில் குமாரசாமியும் காளியும் திரும்பினர்கள். குமாரசாமி மட்டுமே உள்ளே நுழைந்தான். காளி ஏக்க முற்றுச் சிலையான்ை.

தங்கச்சி’

காளி மனத்திற்குள் அழைத்துக்கொண்டான். அவள் நிலைப்படியைத் தாண்டி நின்றாள்; சேலை தரையில் மிதந்து கிடந்தது. பார்வையைத் திசை விலக்கிவிட்டாள்.

‘அண்ணுச்சி, யாரு அந்த மனுசன். அப்பவே தொட்டு என்னையே விழுங்கிப்பிடுகிறவர் கணக்காப் பார்த் துக்கிட்டே இருக்காரு. அந்த ஆளு பைத்தியமாங் காட்டி யும்-?”

அந்த வார்த்தைகள் காளிக்குத் தெளிவாகக் கேட்டன. அந்தப் பெண்தான் பேசினுள்.

“சுரீர், சுரீர்” என்று அவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் கரிய அம்பாகப் பாய்ந்தன அவன் உடல், உள்ளம் இரண் டிலுமாக. எய்தவனிருக்க அம்பை கோவதா? அம்பைசொல் அம்பை எய்தது அந்தத் தங்கச்சி’யாயிற்றே? உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்ததாகப் பாசம் சோரிந்தானே அவன்?

காளி அன்பு காட்டிஞன். அவளோ பழி காட்டிவிட் டாள். பேதை அன்பும் பழியும் துருவங்களின் இருமாறு பட்ட புள்ளி மையங்களல்லவா? இந்த இரண்டு உள்ளங் களும் எங்ஙனம் ஒன்று சேர முடியும்? அவன் பிணைத்து இனக்கப் பார்த்தான். அவள் அபவாதம் சொல்லிவிட் ட்ாளே! எண்ணெயும் தண்ணிரும் ஒன்று கலக்க முடியுமா, என்ன? - - - - - - - -

அந்த யுவதி எய்த அம்பு காளியைத் துளைத்துக்கொண் டிருந்தது. புண் ரணமாயிற்று, கணத்தில் மீண்டும் அம்பு வீச்சு. ஐயையோ! அவன் துடித்தான், கரையில் வீசி யெறிந்த மீனைப் போல. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/167&oldid=684333" இலிருந்து மீள்விக்கப்பட்டது