பக்கம்:வேனில் விழா.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 167

தேங்கச்சி!”

கண் ணிர் வெள்ளம், வெந்து புரையோடிய நெஞ்சு, உயிர் ஊசலாடிய உடல்; இங்கிலேயிலும் காளி அவளே மறக்கவில்லை. -

துள்ளியோடும் ஆற்று நீரின் மேல் பரப்பு அழகாகசலனமற்றுத்தானே தோன்றுகின்றது. ஆனல் நீரின் அடிப் பரப்பிலே சுழித்தோடும் சுழல் யாருக்குப் புலப் படும்?

மனம் ஒரு கைக் குழந்தை. எடுப்பவர்கள் குழந்தை வசம் மனமிழக்கலாம். அதே சமயம் குழந்தை, எடுப்ப வரைப்பற்றி எங்கிலையில் தீர்ப்பு நிர்ணயம் செய்கிறதோ? யார் அறிவார்கள்? காளியின் மனமும் அப்படித்தான்! அவன் அந்தப் பெண்ணைத் தங்கையாக மதித்தான். தன் சொந்தச் சகோதரியைப் போலவே, ஒரே அச்சாக-அசல் அவளே மாதிரி காணப்பட்ட அந்தச் சிறுமியின் சூழ் கிலே யிலேயே இருந்து, ஏதேனும் குற்றேவல் புரிந்து வாழ்வின் எஞ்சும் நாட்களைக் கழித்துவிடலாமென்று கனவு கண்டான் காளி. இது குறித்துக் குமாரசாமியிடம் பேச்செடுக்கவு மிருந்தான் அவன். ஆளுல் அந்தப் பழி காளி பாவமறி யாதவன. பழி சுமத்தப்பட்டான், பாவம்’

காளி கனவிற்குங் கனவின் விழிப்பிற்கும் ஊடே அல் லாடின்ை. விழிப்பு அவனது கண்களை வழி திறந்தது.

அதே கணம் அவ்வீட்டை விட்டு வெளியேறிஞன். நீர் முட்டிய கண்களால் உலகத்தைத் துழாவினுன். காளிக்கு உலகம் இதய மற்றதாகப் பட்டது; பாசமற்றதாகப்பட்டது; அவிழ்க்கக் கூடாத விடுகதையாகப் பட்டது.

கால்கள் இழுத்த திசையில் நடந்தான்; கடந்து கொண்டேயிருந்தான்! அவனது கேத்திரங்களின் கூட்டுற வில் உலகம் சூன்யமாகிக் கொண்டே வந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/168&oldid=684334" இலிருந்து மீள்விக்கப்பட்டது