பக்கம்:வேனில் விழா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ்.ஆறுமுகம் 169

அக்தி வானத்தில் மலர்ந்து விளையாடிய விந்தைக் கோளங்களின் வர்ணக் கோலங்கள் மாடித் தாழ்வாரத்தி னேக் கடந்து கட்டத்தில் இழைந்து, இறைந்து கிடந்தன.

அழகேசன் ஆரோக்கிய மலர்ச்சியுடன், தலைமுடியைக் கோதி விட்டவணுகக் கூடத்துக்கு வந்தான். எச்சில் கோப்பையும் கையுமாக சுந்தரி அம்மாள் நின்றாள்.

‘அம்மா !” ‘தம்பி, ராத்திரிக்கு பலாச்சுளே வத்தல் போட்டுக் குழம்பு வைக்கச் சொல்லவா? உனக்கு இஷ்டமான வடகம், அப்பளமும் பொறிச்சுப்பிடுறேன்,” என்று கேட்டாள் தாய்.

“உங்க இஷ்டம், அம்மா!” “என் இஷ்டம் எல்லாம் அடுத்த வாரம் ஆவணி பிறக்கிற மட்டுக்குந்தானே, அழகேசா?”

அழகேசன் தன் அன்னையின் அருள் நிறை அன்பு முகத்தை, பக்தி மண்டித் தழைத்த பாச உணர்வுடன் நோக்கின்ை. விழிகளிலே கண்ணிரின் சுழிப்பு, மெய் வெளியில் அழுந்தப் பதிந்த நடுக்கம், இதயத்தின் ஆடி மட்டத் தளத்தினில் அழகுருக் கொண்ட இன்பக் கனவின் கிழலாட்டம். சுய கினேவை மறப்பதற்கும் கேரம், காலம் உண்டல்லவா?

“அப்படி ஏனம்மா சொல்றீங்க? உங்கள் இஷ்டத்துக் கும் விருப்பத்துக்கும்தான் அம்மா இங்கே முதல் இடமும் முதல் மரியாதையும் முதல் மதிப்பும் உண்டு!...நான் கைப் பிடிக்கும் அபர்ணு, உங்களை முதலில் பெருமைப்படுத்திசந்தோஷம் அடையச் செய்து, அப்புறந்தான் என்னவளாக மாறுவாள், அம்மா! பெற்றவளுக்குப் பின்தானே உற்ற, வள்?... பாசம் வழிநடத்த, பந்தம் வழி தொடர வேண்டியது தானே உலகானுபவம்?...” .

அபர்ணு என்னும் தெய்வப் பெயர் அழகேசனுள் மருக் கொழுந்து மணமாக வாசனை கூட்டியது. கிள்ளிய இடத்தி லெல்லாம் சுகந்தம் பரப்பும் பண்புகொண்டதாயிற்றே மருக் கொழுந்து எளிமையின் கோலம் கொண்ட மருக் கொழுந் தைத் தான்.அபர்ணுவுக்குச் சாலச் சிறந்த உதாரணமாகத் தேர்தெடுத்தான் அவன்!. - . . . . . ‘ ‘. “

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/170&oldid=684337" இலிருந்து மீள்விக்கப்பட்டது