பக்கம்:வேனில் விழா.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவ்ை எஸ். ஆறுமுகம் 71

தர்ப்பம் வாய்த்திருக்குது. இதையும் கைகழுவ விட்டுப் பிட்டேன் னு, என்னுேட கனவையே கைநழுவ விட்டுப்பிட்ட தாகவே உணர்வேன். அம்மா, உங்க விருப்பப் பிரகாரம் கான் உங்க தம்பிமகள் தாரணியைக் கல்யாணம் கட்டிக்கிட முடியலே. இதுக்காக நீங்க என்னை மன்னிச்சிடுங்க. தாரணி தங்கம். அது எனக்கு கல்லாப் புரியும். ஆணு, என் நெஞ்சிலேயும் கினேவிலேயும், நீக்கமற நிறைஞ்சிருக் கிற கடவுளாட்டம் ஒரு உயிர் முழுசாக வடிவமெடுத்துப் பரவிக் கிடக்குதின் னு, அது... அது அபர்ணு என்கிற ஒரு பெண்ணுகத்தான் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ் வொரு இடத்திலே-ஒவ்வொரு பேரிலே பிடிப்பமும் பிடித்த மும் உண்டாகிறது சகஜந்தான். என்னுேட கிலேன்மையையும் நினைப்பையும் நெஞ்சு திறந்து சொல்லிப்பிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம், அப்பா இஷ் !’

கண்ணிருக்கு இதயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் கண்ணிரின் இதயம், பாசத்தின் இதயத்துடன் கலந்து பேசியிருக்கவேண்டும்.

சுந்தரி அம்மாள் முத்தாய்ப்பு வைக்கலானுள்: ‘தம்பி, உன் மனசு போலவே அபர்ணு என்கிற பெண்ணையே கட்டிக்க. ஜாதகம் அனுப்பச் சொல்லு, பெண் பார்க்க வாரதாக லெட்டர் போடு லவிதம் என்று ஒன்று இருக்கு தில்ல, அதுப்படிதானே சகலமும் கடக்கும்...!”

 3k

தியாகராய ககரிலே அட்வகேட் அம்பலவாணன் என்றால், கைதேர்ந்த புள்ளி, கைவிட்ட கிரிமினல் கேஸ்” கட்டுக்களுக்கெல்லாம் உயிரூட்டிய மனிதர் அவர். தம் மைந்தன் அழகேசன எம். ஏ. பட்டம் பெறச் செய்தார். அழகேசனுக்கும் அவனுடைய அம்மான் மகள் தார ணிக் கும் திருமணம் செய்வித்து, அவன் கையால் அவள் கழுத் தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டுவிடச் செய்யவேண்டு மென்பது அவரது அபிலாஷை, “அந்த நாளையிலேருக்து உன் ஒருத்தனுக்குத்தான் அந்தப் பெண் ஒளிந்து கொள்ளு கிருள்! ஒளித்து வைத்திருக்கும் பட்சனங்களை உ ைஒருத்த னுக்குத்தானே அவள்கொண்டாந்து தருகிருள்? புருஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/172&oldid=684339" இலிருந்து மீள்விக்கப்பட்டது