பக்கம்:வேனில் விழா.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 டுை ‘

பெண் சாதி என்கிற பாக்தவ்யம் சின்ன வயசிலேயிருந்தே பிறந்திடும் போலிருக்கு!’ என்று அவனிடம் அவர் பூடக

மாய்ச் சொன்ன நாட்கள் ஒன்றிரண்டல்லவே!

விதி வலிது!


உதயம் எனும் மலர் ஏடவிழ்ந்து, மணம் எனும் செஞ் சுடர்ப் பிழம்பை உலக உருண்டையைச் சுற்றிலும் இழைக் தோடச் செய்து வேடிக்கை காட்டி, அவ்வேடிக்கையை விளையாட்டாக்கி அனுபவித்துக்கொண்டிருந்தது.

திருமண அழைப்பு மடல்கள் கட்டுக் கட்டாக மேஜை விளிம்பில் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன.

அழகேசனின் மனக்கனவுகள், அவனது கைப்பிடியி லிருந்த பேணுவுக்கு ஊட்டம் கொடுத்து இயக்கின. எடுபிடிப் பையன் அழைத்துவந்த தபால்காரன், ஓர் உறையை எடுத்துப் பிடித்து நீட்டினன், அழகேசனிடம்.

பதிக்கப்பட்ட கையொப்பம், உறைவாயைத் திறக்கும் உரிமையை ஈந்தது.

அழகேசனின் நயனமணிகளிலே ஆர்வமும் ஆதங்க மும் ஒன்றுக்கொன்று சமன் கிலேயில் இயங்கும் உணர்ச்சி களாகப் பிரதிபலித்தன. மடிக்கப்பட்டிருந்த நான்கு மடிப் புக் கடிதத்தைப் பிரித்து கேர்வாக்கில் பார்ப்பதற்குள், அவனுக்கு பதட்டம் கண்டது. எம். ஏ. பட்டப்பரீட்சையில் தேர்வை எண்வாரியாகப் பார்த்தபோதிருந்த தென்பு எங்கே ஓடிற்றாே? கடைசிப்பக்கம் புரட்டப் பட்டது. இமைக் கரை களில் அதிசயம் கரை சேர்க்கப்பட்டது. இதயததினின்றும் வெய்துயிர்ப்புத் தள்ளப்பட்டது. இதயம் விடு தூது’ போலும்! * . . . .

அந்தக் கடிதத்துக்குப் பேசத்தான தெரியாது?

‘பெருமதிப்புக்கும் கல்வணக்கத்துக்கும் உரிய எனது எதிர்காலக் கணவர் அவர்களின் பாதகமலங்களில் தண்ட னிட்டு அடியாள் அபர்ணு எழுதுவதாவது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/173&oldid=684340" இலிருந்து மீள்விக்கப்பட்டது