பக்கம்:வேனில் விழா.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 17 3

என்னுடைய இந்தக் கடிதம் உங்களுக்குத் திகைப்பை அல்லது ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடும்.

அன்றாெரு நாள், தஞ்சையம்பதியில் என்னைப் பெண் பார்க்க தாங்கள் வந்தீர்கள். பிஞ்சுப் பிராயமதில் என்பால் ஏற்பட்ட ஒரு நல்லெண்ணம் காரணமாக, தாங்கள் என்னை ஆட்கொள்ள விழைவதாக என்னிடம் தாங்கள் தெரிவித்த தைக் கேட்ட நிலையில், மெய்யாகவே நான் மெய் சிலிர்த்துப் போனேன். காலச் சக்கரத்தின் விபரீதச் சுழற்சியின் விளை வாக, அடித்தளத்திற்குக் கொண்டு வரப்பட்டுவிட்ட எங்கள் குடும்பம் தங்களது உயர் அன்பினுல் புத்துயிர் பெறப் போகிறதென்பதை அறிந்த நான் ஆண்டவனே. கினேந்து கினைந்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்து, அந்த மகிழ்வுத் துளிகளையே ஐயனுக்குக் காணிக்கையாக வைத்ததுண்டு!

ஆம், நாமெல்லோரும் ஆண்டவனுடைய விளையாட்டுப் பொம்மைகள். இல்லையென்றால், இப்படிப்பட்ட சிருஷ்டி விளையாட்டுக்கள் கிகழ வாய்க்குமா?

வாழ்வே ஒரு சோதனை என்று புரிந்தும், உணர்ந்தும், தெளிந்தும் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

இப்போது நானே ஒரு சோதனைக் கட்டத்தில்தான் கின்று கொண்டிருக்கின்றேன்.

நேர்முகம் காட்டி உங்களிடம் சொல்லத் தயங்கித் தத்தளித்த ஒரு செய்தியை இப்போது உங்கள் முன்

வைத்திடவேண்டியவளாக ஆகியிருக்கிறேன். இது என் கடமையாயிற்றே? - -

எனக்கு ஓர் அத்தான் இருக்கிறார். பெயர்; சுந்தரம். சுந்தரமானவர்தான். எனக்கு அவர்; அவருக்கு கான்’ என்றே எங்கள் இருதரப்புக் குடும்பத்தவர்களும் தீர்மானம் க்ட்டி வைத்திருந்தார்கள். ஆனல், விதி மாறிச்சுழன்றது. எங்களைத் திசைக்குத் திசை மாற்றிவைத்துச் சுழன்றது. என் தந்தையின் வியாபார நொடிப்பு ஒருபுறம் இருக்கட்டும். அது எங்கள் வரை, எவ்விதமான சலனத்தையும் உண் டாக்கவில்லை. ஆளுல்...ஆனல்...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/174&oldid=684341" இலிருந்து மீள்விக்கப்பட்டது