பக்கம்:வேனில் விழா.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஒ :

என் அத்தான் கைதேர்ந்த ஆட்டக்காரர். டென்னிஸ் சாம்பியன்’. சென்னைக்கும் தஞ்சைக்கும் நடந்த பந்தயத் தில் வெற்றி பெற்ற அன்று அவர் மகிழ்ச்சி துள்ள ஓடோடி வந்தார், கைமட்டையைச் சுழற்றிக் கொண்டே. களப்பின் மிகுதியால் ஏற்பட்டிருந்த கிறுகிறுப்பினுல் அவர் கிலே தடுமாறிச் சாய்ந்தார். சாய்ந்த வேகத்தில், கடையில் கிடந்த அரிவாள்மனே அவருடைய சோற்றுக்கை முட்டை வெட்டி விட்டது. தொடக்கத்தில் அசிரத்தையுடனும் அஜாக்கிரதையாயும் இருந்ததால், கிலே சீர்கெட்டது. இறுதியில், அவரது வலது கை வீங்கியது; துடித்தார். வலக்கையில் உள்ளுக்குள்ளேயே புரையோடிப் போய்விட்ட புண் காரணமாக, அவர் தனது வலது கையை இழக்க நேரிட்டுவிட்டது!... ஐயோ, காலம் கொடிது!

என் அன்பு அத்தானிடம் விளைந்த இம்மாறுதல், என் இதயத்துள் எத்தகைய மாறுதலையும் எழுதிக் காட்டவில்லை. “அத்தான், கான் என்றென்றும் உங்கள் அடியாள்தான். என்னே ஏற்று ரட்சியுங்கள். உங்களுக்குச் சகல விதத் திலும் நான் துணை நிற்பேன்,” என்றேன்; நெஞ்சு கெக் குருகச் சொன்னேன். எரிதழலில் தூவப்படும் சாம்பி ராணியினின்றும் எழுகின்ற நறுமலை மென என் இதயம் அவர் மனத்திடை மணத்தைப் பரப்பியதை நான் அவரது முக பாவத்திலிருந்து கண்டு கொண்டேன். ஆனல் கான்

பாவி, கொடுத்து வைக்காதவளாகப் போனேன்.

‘உன் எழில் ஆதரிச எழில். முழுமை பெற்றிருக்கும் உன்னுடைய அழகிலே இணைவதற்கு, குறைபட்ட என் எழில் தகுந்ததன்று. என்ன நீ என்றென்றும்ே மறந்துவிட வேண்டி நேரிடும். நிறை பெருக்குக்குள் என் குறை உடலைத் திணித்துக் கொள்வேன் ‘ என்று ஆணே வைத்தார்.

நான் துடித்தேன். தரை மீளுனேன். ‘ அத்தான், உங்கள் கருத்தெதுவோ, அதன் பிரகாரமே நான் கட்டுக் கிறேன். நீங்கள் என்றென்றும் என் கண் பார்வையில் இருங்கள். அதுவேதான் எனக்கு அளப்பரிய ஆறுதல் நல்கும். இந்த ஒரு வரத்தையாகிலும் தாருங்கள் !’ என்று வேண்டினேன். : “. . - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/175&oldid=684342" இலிருந்து மீள்விக்கப்பட்டது