பக்கம்:வேனில் விழா.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் I75

அவர் சிரித்தார்.

என் மனம் அழுததை அவரிடம் எங்ஙனம் கோடிட்டுக் காட்ட முடியும் ?

“ உனக்கென்று-உன்னுடைய ஓவிய எழில் கிறைக் கென்று வேறு ஒருவர் ஜனித்திருக்க வேண்டும். பாரேன், உ ன க் கு ரிய மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கிறேனு, இல்லையா !” என்று மகிழ்வின் பாதையில் மடங்கி கின்று, ஆசையின் கனல் வீச்சுடன் காத் தழுதழுக்கப் பேசினர்.

அத்தான் தெய்வம் !

அடுத்த கட்டத்தில்தான் நீங்கள் தெய்வ உருக் கொண்டு வந்தீர்கள்.

விட்டகுறை-தொட்ட குறையின் விளைவுகள் சரித்திரப் பிரசித்தம் அடைந்தவை யாகும்.

உங்கள் மனங்கவர்ந்த அடியாளின் வேண்டுகோள் இதுவே: என் அத்த்ான் அவர்களுக்கு இன்றைய அளவில் என் ஒருத்தியைத் தவிர, வேறு எந்த ஆதரவோ, கிழலோ இல்லை. ஆகவே, என் அத்தான் என்றென்றும் நம் முடனேயே இருக்க தாங்கள் பெருக்தன்மை கொண்டு அனுமதி தருவீர்களா ?

நான் உணர்கிறேன். தாங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு, இதய பூர்வமான்தொரு மகத்தான நம்பிக்கையின் வாய்மடையில் ஜனித்திருப்பதாகும். விதியும் காலமும் தோற்றுவித்த புது வெள்ளப் பெருக்கில் கலந்திருந்த துசு தும்பட்டையெல்லாம் மடைவாயிலேயே தங்க, அதன்பின்

பிரிந்து ஓடிவரும் நிர்மலமான புதுகீர் போன்ற தங்கள் பாசத்தை கான் தீர்க்கமாக அறிவேன். உங்களது அடையா கெடுங் கதவமான அந்த அன்புக்கு-அந்தப் பாசத்துக்கு என்னுடைய இந்த விண்ணப்பம்-உண்மைகில தாழ்’ எதையும் இட்டுவிடலாகாதே யென்ற பயத்தில்தான் முன் கூட்டியே தங்கட்குத் தெரிவிக்கலுற்றேன். இந்த ஒரு வேண்டுதலையின் தலைவாயிலில் நின்று, பலன் எதையும் கருதமாட்டாத பக்தை என்ற கிர்ணயிப்பில் தாங்கள் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/176&oldid=684343" இலிருந்து மீள்விக்கப்பட்டது