பக்கம்:வேனில் விழா.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 177,

இச்சம்பவம் அதனுள்ளே வாழ்ந்து, அவனே வாழவைத்த

ஆதையை அவன்தான் அறிவான் புயலில் சிக்கிய தளிராக, பர்ணுவின் குடும்பம் காலவினக்கு உடந்தையாகித்

தவித்துத் தடுமாறிய கதையை அவளே அறிய முடியும் !


இறைமைச் சக்தியின் தலைமையின்கீழ், ஹோமத்தி முன்மொழிய, கொட்டுமேளம் வழிமொழிய, வாழ்ந்து காட் டியவர்களின் முன்னிலையிலே சிரஞ்சீவி அழகேசன், செள பாக்கியவதி அபர்ணுவுக்குத் திருப்பூட்டினன்.

ஆண்மையும் பெண்மையும் அதனதன் அளவில்அதனதன் போக்கில் முழுமை பெற்றன. இருவரும் உடலும் உயிரும் ஒன்று கலந்த பண்பாட்டில், காலம் பண் பாடிப் பறந்தது. -

அழகேசனுக்கு அந்த ஒரு காட்சி பசுமை தட்டித் திகழ்ந்தது. கையிலேந்திய மங்கல காணுடன் நாணம் பூத்த மணம் கமழ் மலராக-ரோஜாப் பூவாக, குனிந்த தலை நிமிராமல், நிமிர்ந்த பெருநோக்குப் பாசம்-அன்பு குனியாமல் வீற்றிருந்த மனப்பந்தல் கொலுப்பதுமையை ஜாடை சேர்த்துப் பார்த்திடத் தவித்த நேரத்தில், அவனது கண் விரிப்பில் அதுசமயம் தாரணி தட்டுப்படுவாள், கண்கட்டு மாயம் செய்வாள், தாளையடிப் பயிர் உதிர்க்கும் கெல் மணிகளாய் தன் நினைவுகள் சிதறுமென்று அவன் கணித் திருக்கவா முடியும் ? இல்லை, அந்தப் பெண் தார ணியின் அந்த ஒரு சொட்டுக் கண்ணிரின் பொருளே மாற்றுரைத்துச் சோதிக்கத்தான் அவன் சாகஸம் பயின்றவன?... காதலின் கதையில் கண்ணிரின் கறை இருக்கத்தான் செய்யும். கண்ணிரின் கறையில் கர்தலின் கரை தென்படாம்ல் இருப்பதும் கியதிக்கு முரண்பட்ட கோட்பாடல்லவே. 1. என்னவோ, காதல் ...என்னவோ, வாழ்க்கை ...விளையும் ஆசாபாசங்களையும்-நொறுங்கிச் சிதறும் ஆசாபாசங்களே. யும் கம்பித்தான் உலகம் உருள்கிறது!

அடிக்கடி அழகேசன் எண்ணமிடுவது இயல்பு: ‘தாரணி தங்கமான பெண். அவள் விரும்புகின்ற கல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/178&oldid=684345" இலிருந்து மீள்விக்கப்பட்டது