பக்கம்:வேனில் விழா.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 டு ‘

மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தால் தான் எனக்கு அம்ைதி பூக்கும்!...”

“குட்மார்னிங், மிஸ்டர் அழகேசன்’

அழகேசன் விழித்துப் பார்த்தான்.

மேற்சட்டையின் வலதுகைப் பகுதி துவண்டு விழ, புதுமலர்ச் சிரிப்பை மாற்றாமல் வந்து கின் ருன் சுந்தரம்.

“குட்மார்னிங்...வெளி குட் மார்னிங் உட்காருங்கள்!’

சுருட்டைத்தலை முடியுடன் வம்பாடிக் கொண்டிருந்த சீப்பைக் கையில் பற்றியவாறு, அவன் சுழல் நாற்காலியைச் சுற்றிய நேரத்தில், காலமெனும் சுழல் நாற்காலியும் சுழன்றது.

அழகேசனின் டென்னிஸ் ஆட்டத் திறன் பற்றி மாம் பலம், மயிலாப்பூர் வட்டங்களிலே கல்ல பெயர். ஒரு முறை சென்னைக்கும் தஞ்சாவூருக்குமிடையே பந்தயம் கடந்தது. ‘லிங்கிள்ஸ் ஆட்டம் ஒரு பக்கம்: அழகேசன், எதிர்த் தரப்புக்கு: சுந்தரம்! பாயிண்ட்ஸ் கணக்கில் லயித்து, ஆட்டத்தின் சரிசமானமான திறமையில் மயங்கி கின்ற பார்வையாளர்களுக்கு இறுதியில் ஒரு செய்தி கிடைத்தது: அதுதான் சுந்தரத்தின் வெற்றி குறித்த செய்தி. வெற்றிக் கோப்பையும் தானுமாகக் காட்சியளித்த சுந்தரத்தின் உரு வத்தை அழகேசன் பலமுறை கினைத்துப் பார்த்ததுண்டு. ஆனுல், அந்த ஆட்டமே அவனுக்குக் கடைசி ஆட்டமாக அமையுமென்று அவன் நினைத்ததுகட்ட கிடையாது; அந்தச் சுந்தரம் என் அபர்ணுவுக்குச் சொந்த அத்தான்!”

அபர்ணு பலகாரத் தட்டுக்களுடன் அறைக்குள் நுழைந்து, தட்டுக்கள் இரண்டையும் ஸ்டூலில் வைத்துத் திரும்பினுள்.

அழகேசன் ஒரு தட்டைத் தன் மடியில் வைத்தான். சுந்தாத்தைப் பற்றிய சுயநின்ைவு அவனுள் வீரிட்டபோது, அவனுள்ளே பூசும்ப அதிர்ச்சி எழுந்தது. தன் தட்டை எடுதது ஸ்டுலின் மீது திரும்பவும் வைத்தான். சுந்தரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/179&oldid=684346" இலிருந்து மீள்விக்கப்பட்டது