பக்கம்:வேனில் விழா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 17

“நிச்சயதாாத்தம் கடந்து, அவர்கள் குல வழக்கப்படி, நடராஜனுக்குப் பெண் வீட்டிலிருந்து மோதிரம் ஒன்று: செய்து அனுப்பப்பெற்றது. அந்த மோதிரத்திற்குப் பெயர் “கைப்பிடி மோதிரம்”. ஆனுல், மகிழ்வும் நிறைவும் விளை யாடிய மனையில் தொல்வினை'யும் உடன் இணைந்து விளை யாடிய-விளையாட்டுக் காட்டுமென்று அவர்களுக்குச் கோதி டம் தெரியுமா, என்ன? கீழராஜ வீதியிலிருந்து வடக்கு ராஜ வீதியை மிதித்தவளாக ஆக்கிவிட்டது. புதிதாக கெட்டிக் கார சோசியர் வந்து உங்க ரெண்டுபேர் ஜாதகத்தையும் பார்த்ததிலே, உங்களுடையது ரெண்டும் சரிவரக் கூடி வரலேயாம்!” என்னும் செய்திதான் அது. இதைக் கேட்கக் கேட்க, அலமேலு அனல் தண்டிய அழகுமுல்லையாளுள். அடுத்த மூன்றாம் நாள் அவள் இன்னொ:ரு செய்தியைக் கேள்விப்படலானுள். திருச்சியில் பெரிய செல்வந்தர் மக ளுக்கு நடராஜன் திருப்பூட்டப்போவதாக அறிந்தாள். ‘பணம் அவரோட கண்ணே மூடிப்பிடிச்சு. இதை மறைக்க, ஜாதகக் கோளாறு என்கிற திரையை இழுத்துமூடி நாட கம் போட்டிருக்காரு. பணம் எட்டின மட்டும் பாயும் என் கிறது சரியாகப் போச்சுது!...ம்!’ என்று எண்ணம் பரப்பி ள்ை. நடராஜனின் திருமண அழைப்பு வந்தது. யாரும் டோகவில்லை. அப்பால், அவர் சென்னையில் தொழில் பண் ணிர்ை. ஆண்டுகள் எத்தனையோ ஆகிவிட்டன. எல்லாம் பழங்கதையாகிப் போயின. ஆளுல், நடராஜ னிடமிருந்து திருப்பித் தரப்பட்ட அந்த மோதிரம் அலமேலு. அம்மாளே அவ்வப்போது சலனத்திற்குள் ஆழ்த்தி வேடிக் கை காட்டி வந்ததென்னவோ உண்மைதான்!..

தெய்வசித்தம் என்ற ஒன்று இருக்கத்தான் செய் கிறது! -

அலமேலுவைக் கைபிடித்தார் நாகலிங்கம், சாரங்க ராஜனை அவ்வீட்டுக்கு ராஜாவாக ஆக்கிய கிம்மதியுடன் அவர் விண் ஏகினர். மகனே அவளுக்குச் சகலமாக உலகத்தின் உருபொருளாக-உற்ற பொருளின் உயிர்த் தத்துவமாக விளங்கினன். ஓடிய நாட்களின் பின்னே அவ. ளும் ஓடினுள். அந்த ஓட்டல், சாரங்கராஜனின் படிப்புக்கு உறுதுணை நின்றது. தாயையும் மகனையும்:பிரித்த காலிக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/18&oldid=684347" இலிருந்து மீள்விக்கப்பட்டது