பக்கம்:வேனில் விழா.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 179

நாற்காலியுடன் தன் நாற்காலியை இணைவாக நகர்த்திப் போட்டுக்கொண்டு, அவன் மடியிலிருந்த தட்டினின்றும் இட்டிலியைப் பிட்டுத் துண்டாக்கி, சுந்தரத்தின் வாயில் போட்டான் அழகேசன். சுந்தரத்தின் கண்களில் பனித்

திரை.

அபர்ணு வந்தாள். தாரணி வந்தாள். முன்னவள் கையில் நெய், பின்னவள் கையில் காப்பி.

“அத்தான்! சுந்தரம் அத்தானுத்கு நான் பலகாரம் கொடுக்கிறேன். இருங்கள், கெய் ஊற்றுகிறேன். நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். கம்பெனிக்கு நாழியாகி விட்டது!” என்றாள் அபர்ணு. ஒரு தடவை, குளித்துவிட்டு வந்தான் சுந்தரம். அபர்ணுவை முக்திக் கொண்டு அழகேசன் அவ னுக்குத் துணிமணி எடுத்துப் போட்டுவிட்ட சம்பவம் அவள் மனத்தில் ஆழப்பதிந்தது.

ஒ. கே. சொன்னுன் அழகேசன்.

நெய் ஊற்றினுள் தாரணி. இன்னும் கொஞ்சம்!” என்று கேட்டாள்.

கையமர்த்தினு ன் அழகேசன். சுந்தரத்துக்குப் பார்த்து ஊற்று, தார ணி!”

...!

சுந்தரம் போதும் என்று நான்கு முறை சொல்லியும், அவள் கேட்டால்தானே? -- . . . . . . .

ஸ் பூ னி ல் ஊட்டிக்கொண்டிருந்த அபர்ணுவுக்கும் சேர்த்து நெய் அபிஷேகம் நடந்தது, ஜம் ஜம் மென்று!

உற்றவர்களும் உறவினர்களும் விருந்து முடித்து, அவர வர்களின் ஊரை நாடிப் போய்ச் சேர்ந்தார்கள்.

தாரணி மட்டுமே மிஞ்சிள்ை. அபர்ணு, என் அத்தானே நீ கவனித்துக் கொள். உன் அத்தானுக்கு வேண்டியவைகளே நான் கவனித்துச் செய்கிறேன்!” என்று சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/180&oldid=684348" இலிருந்து மீள்விக்கப்பட்டது