பக்கம்:வேனில் விழா.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 te டு p”

அபர்ணு எப்படி அகமகிழ்ந்து போளுள்!

ஒரு வாய்ப்பு:

அழகேசனும் சுந்தரமும் தடுக்குகளில் அமர்ந்திருந்தார் கள். கிருத்திகை. தாரணி தக்காளி சூப்பைக் கரண்டியில் எடுத்து ஊற்றினுள். ரசத்துளிகள் தாரணியின் விழிகளில் தெறித்து விட்டன. அவள் துடித்தாள். அழகேசன் எழுந்து கைக் குட்டையினுல் அவளது கண்மலர்களை ஒத்திட்டு, இதழ் குவித்து ஊதி, அவளுக்குண்டான வேதனை எரிச் சலைப் போக்கடிக்க முயன்று கொண்டிருந்த சமயத்தில், மோர்ச் செம்புடன் தோன்றிய அபர்ணு, ஆலயத்தின் முன் இருப்பது போன்ற களங்கமற்ற-பரிசுத்தமான அன்புக் கண் கொண்டு அக்கட்சியைக் கண்டு, பிறகு ஓடிச் சென்று, தாரணிக்கு உதவினுள்.

இளமை மதியம் பவனி வந்தது.

‘அபர்ணு!...”

“அத்தான்!”

“என்ன, தீவிரமான யோசனையில் ஆழ்ந்து விட் டாயே?’’

‘ஒன்றுமில்லை; சுந்தரம் அத்தானைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்தேன். பூர்த்தி பெரு:திருக்கும் அவர் வாழ் வைப் பற்றிய கினைப்பு, என்னையே உருக்குலைத்து விடும் போலிருக்கிறது!’ -

சிருஷ்டியைத் தத்துவம் என்கிறார்கள் ஞானிகள்.

அப்படிப்பட்ட தத்துவம் இப்போது புதிராகவும் காணப் படுகிறதே!” -

“ஊம், எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கிறது!”

அன்று பாதிச் சாமத்தில் விழிப்புப் பெற்ற அழகேசன், பீரோவைத் திறந்து பைல் ஒன்றைத் தேடி எடுத்தான்.

அது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/181&oldid=684349" இலிருந்து மீள்விக்கப்பட்டது