பக்கம்:வேனில் விழா.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலி பாக்கியம்

கொத்துவேல முடிந்து வீடு கோக்கி கடந்து கொண்டி ருந்தான் தங்கவேல். முகத்திரையில் காள் முழுதும் வேலை செய்த களப்பின் அயர்வு ; கெற்றியில் முத்து முத்தாக அரும்பிக் காய்ந்துபோன வேர்வைத் துளிகளின் உவர்க் கோடு ; உள்ளத்திலே, ஆசை வள்ளியைக் காணப்போகும் புளகிதம் !

சந்தின் திருப்பத்தில் தன்னை எதிர்கொண்டழைப்பவள் போலச்சடக்கென்று முன்வந்து கின்ற பொன்னுருவியைக் கண்ட தங்கவேல், சிலகணம் திகைப்பூண்டை மிதித்தவன் போலச் சித்தம் தடுமாறிப்போளுன் அப்போது உண்டான அதிர்ச்சி நீங்கப்பெறச் சற்று கேரமாயிற்று. எதிரும் புதிருமாக கின்றுகொண்டிருந்த பொன்னுருவியை வா!’ என்று கூட அழைக்கவில்லையே என்று அப்போதுதான் கினைத்துக்கொண்டான் அவன். -

  • பொன்னுருவி! பொழுது சாயப்போவுதே ; எங்கே இந்த நேரத்திலே புறப்பட்டுட்டே! ?

இப்படி நேருக்கு நேராக கின்று அவளுடன் பேசிக் கச்சிதமாக வருஷங்கள் இரண்டு ஆகப் போகின்றன வே ! அந்த நாட்களில் இருவரும் சந்தித்துப் பேசும் சமயங்களில் ஏற்பட்ட லளிதமும் வேடிக்கையும் தற்சமயம் அவன் பேச்சில் தலைகாட்டவில்லை. ஏதாவது பேசியாக வேண் டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/185&oldid=684353" இலிருந்து மீள்விக்கப்பட்டது