பக்கம்:வேனில் விழா.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 185

என்ற கிர்ப்பந்தத்துக்கு உட்பட்டவனைப் போல ஏதோ கேள்வி யொன்றைக் கேட்டுவைத்தான். ஆனுல் அவன் இதய அக்தரங்கத்தில் புதைந்து கிடந்த துயரம் மீண்டும் புத்துயிர் பெறும்படி தான் செய்துவிட்டதைப் பொன்னுருவி அறிவாளா ? அறிந்துதான் அவளால் என்ன ஆகப் போகிறது ?

பரிதாபமாகத் தன்னைப் பார்த்து கின்ற பொன்னுருவியை கிமிர்ந்து நோக்கினன். வசந்த மல்லிகையைப் போல, சுண்டிவிட்டால் ரத்தம் தெறிக்கும்படியான பூரண எலும்பும் தோலுமாக உருமாறிப் போய்விட்டாள் ! அவள் முகத்தில் சஞ்சலம் பிரதிபலித்தது. ஆச்சரியப்பட்ட அவன் அனுதா பப்பட்டான். தங்கவேலின் மனம் தறிகெட்டுச் சுழல ஆரம்பித்தது.

பொன்னுருவி ஆம் , அவள் அவனுடைய முறைப் பெண். அன்று மட்டும் அவள் அப்பா அப்படி விடாக் கண்டனுகத் தங்கவேலின் குடும்பத்தாரோடு குஸ்திக்கு கிளம்பியிராமல் இருக்திருந்தால், கட்டாயம் அவள் அவனது ‘ஆசைக் கண்ணுட்டி'யாகவேதான் ஆகியிருப்பாள். ஆளுல் அவர்கள் இரண்டுபேருடைய துரதிர்ஷ்டம் அந்தப் பந்தம் அறுந்துவிட்டது. நல்லது, கெட்டது எந்தக் காரியத் துக்கும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதில்லை. ஒட்டுறவு துண்டிக்கப்பட்டது.

  • அத்தான் !’

பொன்னுருவி !”

‘உங்களைக் காணத்தான் வீடுவரைக்கும் போயிட்டு வாரேன் !’ -

“என்ன சேதி ?”

“அத்தான், என் கைக்குழந்தைக்குக் கபவாத ஜூரம். காலஞ்சு நாளாகக் காய்ச்சல். வைத்தியத்துக்கு முன் அச்சாரமா ஏதாச்சும் கொஞ்சம் பணம் கொடுத்தாத்தான் மருந்து கொடுக்க முடியுமாம். அதுக்குத்தான் உங்க கிட்டேக் கொஞ்சம் பணம் வாங்கிட்டு போவலாமின்னு வந்தேன். என் வீட்டுக்காரர் இருக்கிறப்போ - எதுக்கு

3.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/186&oldid=684354" இலிருந்து மீள்விக்கப்பட்டது